கமலா ஹாரிஸ் தற்காலிக தங்குமிடம் சென்றார்!

கமலா ஹாரிஸ் தற்காலிக தங்குமிடம் சென்றார்!

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசின் அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தில் புனரமைப்பு பணிகள் முடிவடையாததால், அவர் விருந்தினர் மாளிகையில் தற்காலிகமாக தங்கியுள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், அதிபரின் வெள்ளை மாளிகையில் இருந்து, 6 கி.மீ., தொலைவில், உள்ளது, கடற்படை கண்காணிப்பு வளாகம். இங்கு தான், அமெரிக்க துணை அதிபரின் அதிகாரப்பூர்வ மாளிகை உள்ளது. இங்கு, பழுது பார்ப்பு பணிகள் நடப்பதால், கமலா ஹாரிஸ், வெள்ளை மாளிகை அருகே உள்ள, 'பிளேர் ஹவுஸ்' என்ற, அமெரிக்க அதிபரின் விருந்தினர் மாளிகையில் தற்காலிகமாக, குடும்பத்துடன் தங்கியுள்ளார்.''பழுது பார்ப்பு பணிகள் முடிவடைந்ததும், அவர் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு செல்வார்,'' என, கமலா ஹாரிஸ் செய்தி தொடர்பாளர் சைமன் சான்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top