இன்ஸ்டகிராமில் புதிதாக அசத்தலான 7 அம்சங்கள் அறிமுகம்

இன்ஸ்டகிராமில் புதிதாக அசத்தலான 7 அம்சங்கள் அறிமுகம்

உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் இருக்கிறது. இதில் ரீல்ஸ், ஸ்டோரிஸ் என ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கின்றன. இந்நிலையில் தற்போது புதிதாக 7 அம்சங்களை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது. 

இன்ஸ்டாகிராம் தனது தளத்தில் ஒரு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த புதுப்பிப்பு புகைப்படம் மற்றும் வீடியோ பகிர்வு தளத்திற்கு ஏழு புதிய அம்சங்களைக் கொண்டுவருகிறது, இதில் பயனர்கள் ஊட்டத்தின் மூலம் ஸ்க்ரோலிங் செய்து கொண்டே இருந்தாலும், ஒரு நண்பருடன் நேரடி செய்தி அல்லது DM ஐப் பகிரும் திறன் உட்பட. இது தவிர, இன்ஸ்டாகிராம் ஆப்பிள் மியூசிக் மற்றும் அமேசான் பிரைமில் இருந்து இசையின் சிறிய முன்னோட்டத்தை நண்பர்களின் டிஎம்களுடன் பகிர்ந்து கொள்ளும் திறனையும் கொண்டு வருகிறது. இன்ஸ்டாகிராமில் வரும் அனைத்து புதிய அம்சங்களும் இதோ.
 
நாம் ஹோம் ஃபீடில் இருக்கும்போது மெசேஜ் வந்தால் தனியாக இன்பாக்ஸ் சென்று ரிப்ளை செய்யாமல் போஸ்ட் பார்த்துகொண்டே ரிப்ளை செய்யும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாம் மெசேஜ்ஜிற்கு ரிப்ளை செய்யும்போது பேக்ரவுண்ட் அனைத்தும் பிளர் ஆகி விடும்.
 
இந்த அப்டேட் மூலம் நாம் ஒரு பதிவை எளிதாக ஷேர் செய்ய முடியும். ஷேர் பட்டனை அழுத்தி பிடித்தால் அதில் நாம் ஷேர் செய்ய வேண்டிய நபர்களின் ப்ரொஃபைல்கள் காட்டும்.
 
இன்ஸ்டாகிராமில் நாம் நண்பர்களுடன் சேட் செய்வதற்கு ஏற்றவகையில் யாரெல்லாம் ஆன்லைனில் இருக்கிறார்கள் என்று காட்டப்படும்.
 
இன்ஸ்டாகிராமில் நாம் நண்பர்களுடன் சேட் செய்வதற்கு ஏற்றவகையில் யாரெல்லாம் ஆன்லைனில் இருக்கிறார்கள் என்று காட்டப்படும். 
 
நண்பர்களை தொந்தரவு செய்யாமல் சத்தமில்லாமல் மெசேஜ் அனுப்பும் அம்சமும் இன்ஸ்டாகிராமில் இடம்பெற்றுள்ளது. @Silent என்ற வார்த்தையை மெசேஜ்ஜிற்கு முன் பயன்படுத்தினால் அவர்களுக்கு நோட்டிஃபிகேஷன் செல்லாமல் மெசேஜ் அனுப்பப்படும். 
 
இன்ஸ்டாகிராம் நிறுவனம் லோஃபி சேட் தீமை அறிமுகம் செய்யவுள்ளது. இதன்மூலம் மற்றவருடன் நாம் உரையாடுவது தனிப்பட்ட வகையில் இருக்கும். 
 
இன்ஸ்டாகிராமில் குரூப் சேட்டில் வாக்கெடுப்பு வைக்கும் அம்சமும் இடம்பெறவுள்ளது. 
 
இன்ஸ்டாகிராம் பயனர்கள் 30 நொடிகள் பிரிவீவ் உள்ள பாடல்களை நண்பர்களுடன் சேட்டில் ஷேர் செய்ய முடியும். இந்த அம்சம் ஆப்பிள் மியூசிக், அமேசான் மியூசிக்கின் உதவியுடன் இயங்குகிறது. விரைவில் ஸ்பாட்டிஃபையும் இதில் இணையவுள்ளது. 
 
தற்போது குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த அம்சங்கள் விரைவில் உலகம் முழுவதும் வரவுள்ளன.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top