நடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்று

நடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்று

நடிகர் சூர்யாவிற்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதற்காக சிகிச்சை பெற்று நலமுடன் இருப்பதாகவும் அவரே இணைய பக்கத்தில் அதிர்ச்சியான தகவலைத் தெரிவித்திருக்கிறார்.

உலகம் முழுவதும் பத்து கோடிக்கும் மேற்பட்டவர்களை பாதித்து, அதில் 22 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை உயிர்ப்பலி வாங்கி இன்றும் கொரோனா வைரஸ் தொற்று மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் உலக அளவில் பல்வேறு பிரபலங்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில் 'சூரரை போற்று' புகழ் நடிகர் சூர்யாவிற்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
 
இது தொடர்பாக அவர் தன்னுடைய டுவிட்டர் பதிவில் வெளியிட்டிருப்பதாவது...
 
'கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கி விட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும் நன்றிகளும்..' என பதிவிட்டிருக்கிறார்.
 
நடிகர் சூர்யாவிற்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட. விடயம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும், அவர் சிகிச்சை பெற்று குணமடைந்ததால் ஆறுதல் அடைந்திருக்கிறார்கள்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top