சின்மயி குரலில் சர்வம் தாளமயம் ‘மாயா மாயா’ பாடல் வெளியானது

சின்மயி குரலில் சர்வம் தாளமயம் ‘மாயா மாயா’ பாடல் வெளியானது

இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் சர்வம் தாளமயம் திரைப்படம், எதிர்வரும் டிசம்பர் மாதம் 28ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் மாயா மாயா பாடல் சின்மயியின் குரலில் பாடல் வரிகளுடன் வெளியாகியுள்ளது.
 
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில், அபர்ணா பாலமுரளி, வினித், நெடுமுடி வேனு, திவ்யதர்ஷனி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
 
கர்நாடக இசையின் மீது ஆர்வம் கொண்ட சேரிவாழ் இளைஞனின் வாழ்க்கையை கதையம்சமாகக் கொண்ட முழுநீள இசைத் திரைப்படமான இதன்மூலம், இயக்குநர் ராஜீவ் மேனன் 18 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் இயக்குநராக களமிறங்கியுள்ளார்.
 
ரவி யாதவ் ஒளிப்பதிவையும் என்டனி படத்தொகுப்பையும் மேற்கொள்ளும் இந்தத் திரைப்படத்தில், மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மற்றும் மதன் கார்க்கி, அருண்ராஜ் காமராஜ் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
 

Tags: News, Hero, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top