சியோமி அறிமுகம் செய்துள்ள புதிய டெக்னாலஜி!

சியோமி அறிமுகம் செய்துள்ள புதிய டெக்னாலஜி!

காற்றின் மூலம் மொபைல் போன்களுக்கு சார்ஜ் ஏற்றும் டெக்னாலஜியை சியோமி நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

சியோமி நிறுவனம் ‘MI ஏர் சார்ஜ் வயர்லெஸ் சார்ஜர்’ எனும் டிஜிட்டல் டிவைஸ்களை காற்றிலேயே சார்ஜ் செய்யும் வசதி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வொயர் பயன்படுத்தாமல் ஒரே நேரத்தில் பல டிவைஸ்களை சார்ஜ் செய்ய முடியும். இந்த தகவலை சியோமி நிறுவனம் அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதிகபட்சமாக 2 மீட்டர் தூரம் வரை இந்தக் கருவியின் மூலம் டிஜிட்டல் சாதனங்களுக்கு சார்ஜ் செய்ய முடியும் என சொல்லப்படுகிறது.
 
வெகு நாட்களாவே ரிமோட் சார்ஜிங் தொழில்நுட்பம் குறித்து டிஜிட்டல் சாதனங்களை வடிவமைக்கும் நிறுவனங்கள் பேசி வந்தாலும் இதுவரை வணிக ரீதியாக அதை வெற்றிகரமாக எந்தவொரு நிறுவனமும் சந்தையில் அறிமுகம் செய்ததில்லை. முடிந்தவரை இதை டெமோ என்ற படியிலிருந்து அடுத்த படிக்கு நாங்கள் முன்னேறினாலே அது புரட்சியாக இருக்கும் என சியோமி செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top