தமிழக எம்எல்ஏ-க்களின் ஊதியம் இரு மடங்கு அதிகரிப்பு!

தமிழக எம்எல்ஏ-க்களின் ஊதியம் இரு மடங்கு அதிகரிப்பு!

தமிழக எம்.எல்.ஏக்களின் ஊதியத்தை இரு மடங்காக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழக எம்.எல்.ஏக்களின் ஊதியம் இனி ரூ1.05 லட்சம். தமிழக எம்எல்ஏ-க்கள் தங்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிவந்தனர். இந்நிலையில் தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இதைத் தொடர்ந்து தமிழக எம்எல்ஏ-க்களின் ஊதியம் ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்தார். மேலும் தொகுதி மேம்பாட்டு நிதியும் ரூ. 2.5 கோடியாக உயர்த்தி வழங்கப்படுகிறது என்றும் அவர் அறிவித்தார்.

தற்போது எம்எல்ஏ-க்களின் ஊதியம் ரூ.55 ஆயிரமாகவும், தொகுதி மேம்பாட்டு நிதியானது ரூ. 2 கோடியாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எம்எல்ஏ-க்களுக்கான ஊதியம் இரு மடங்காக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top