பெங்களூரு கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்த தமிழர்

பெங்களூரு கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்த தமிழர்

 பெங்களூரு நகரில் சில விஷமிகளால் தலைவிரித்தாடிய கட்டுப்பாடில்லாத மனிதாபிமானற்ற கலவரத்தை மிக மிக சாதுரியமாக, புத்திசாலித்தனமாக செயல்பட்டு தடுத்து அடக்கியுள்ளார் பெங்களூரு கிழக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் ஹரிசேகரன். தமிழகத்தைப் பூர்விமாகக் கொண்டவர் ஹரிசேகரன். இவர்தான் பெங்களூரில் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருந்த கலவரத்தை மிக சாதுரியமாக செயல்பட்டு கட்டுக்குள் கொண்டு மேலும் பரவாமல் தடுத்துள்ளார். இவரது தலைமையில் போலீஸார் எடுத்த அருமையான நடவடிக்கைகள் காரணமாகவே பெங்களூருவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் எந்தவித சேதமும், பாதிப்பும் இல்லை என்கிறார் ஹரிசேகரன்.

 
கலவரத்துக்குப் பிறகு இயல்பு நிலைமை திரும்பி கொண்டு இருக்கிறது. 144 தடை உத்தரவுகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழக-கர்நாடக போக்குவரத்து சேவை தொடர்பாக ஆலோசித்து வருகிறோம்.
 
குடிசைபகுதி மற்றும் அதையொட்டிய இடங்களில் அதிகமான தமிழர்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில்தான் 50 முதல் 60 சதவிகிதம் குற்றச் செயல்கள் நடப்பதுண்டு. அதைத் தடுக்க பெங்களூரு கிழக்கு மண்டலத்தில் கூடுதல் கமிஷனராக பொறுப்பேற்றவுடன், ஆபரேசன் ஏரியா டாமினேசன் என்ற ஆபரேசனை கடந்த ஒரு ஆண்டாக செயல்படுத்தினேன்.
 
தீவிரக் கண்காணிப்பு இதில் 10 ஆண்டுகளாக குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்களை கண்காணித்து தற்போது குற்றச்செயல்களில் ஈடுபடாதவர்களை தவிர்த்து மற்றவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர். இதன் மூலமே கலவரம் ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்க முடிந்தது. 
 
ஏற்கனவே நான் 7 வருடங்களாக ஆபரேசன் டூயூட்டியில் இருந்திருக்கிறேன். கடந்த 1999, 2000 ஆகிய ஆண்டுகளில் வீரப்பன் ஆபரேசனில் இருந்தேன். அடுத்து நக்சல் ஆபரேசனில் பணியாற்றியதால் இந்த கலவர சம்பவத்தை எளிதில் சமாளிக்க முடிந்தது. மூன்று நாட்களும் நான் உள்பட எந்த போலீசும் தூங்காமல் மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்தோம்.
 
பெங்களூரு கிழக்கு மண்டலத்தில்தான் 80 சதவிகித தமிழர்கள் இருக்கிறார்கள். நான் தமிழகத்தை சேர்ந்தவன் என்பதால் என்னிடம் அவர்கள் குறித்த அனைத்து விவரங்களும் தெரியும். இதனால் அவர்கள் மூலம் எனக்கு முழு ஒத்துழைப்பு கிடைத்தது. 
 
மேலும் வதந்தியாக பரவும் தகவல்கள் கூட எனக்கு 24 மணி நேரத்துக்கு முன்பே தெரிந்து விடும். தமிழர்களைப் போல கர்நாடக அரசும், அரசியல்வாதிகளும், மக்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். நான் எடுக்கும் முடிவுக்கு அவர்கள் முழு ஆதரவு கொடுத்தார்கள்.

Tags: News, Hero

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top