5 மாநிலங்களில் படுதோல்வி... கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி!

5 மாநிலங்களில் படுதோல்வி... கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி!

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ள நிலையில் காரிய கமிட்டியை கூட்டுவதற்கு தலைமை உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தராகண்ட், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் பாஜக, சமாஜ்வாதி இடையே பிரதான போட்டி நிலவியது. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ஆட்சியை தொடரவிருக்கிறார்.
 
கோவா, மணிப்பூர், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களிலும் பாஜக தனது ஆட்சியை தொடரவிருக்கிறது. பஞ்சாபை பொறுத்தவரை நல்ல வாய்ப்பை கூட காங்கிரஸ் நழுவவிட்டது. பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால், அம்மாநில காங்கிரஸ் கமிட்டியில் அண்மையில் நடந்த குழப்பங்கள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
 
பஞ்சாபில் பாஜக பலமில்லாமல் இருப்பதால் காங்கிரஸ் அலட்சியமாக இருந்துவிட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்றுள்ளது. மொத்தமாக, ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது.
 
இந்நிலையில், தேர்தலில் தோல்வி அடைந்ததற்கான காரணங்கள், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் காரிய கமிட்டியை கூட்டுவதற்கு அக்கட்சியின் அகில இந்திய தலைமை முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
 
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா, “ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே உள்ளன. ஆனால், மக்களின் ஆசியை பெற தவறிவிட்டோம் என்பதை ஏற்கிறோம். தேர்தல் முடிவுகள், தோல்வி குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் காரிய கமிட்டியை கூட்டுவதற்கு சோனியா காந்தி முடிவு செய்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top