55 நாடுகளில் வெளியாகவிருக்கும் முதல் தமிழ் படம் "பைரவா"

55 நாடுகளில் வெளியாகவிருக்கும் முதல் தமிழ் படம் \

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'பைரவா' திரைப்படத்தை தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த படம் வெளியாக இன்னும் மூன்றே நாட்கள் மட்டும் இருப்பதால் விஜய் ரசிகர்களுக்கு 'பைரவா' காய்ச்சல் தொற்றி கொண்டுள்ளது.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் 100 வருட வரலாற்றில் முதல் முறையாக 'பைரவா' திரைப்படம் உலகம் முழுவதும் 55 நாடுகளில் வெளியாகவுள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, லட்டிவா, போலந்து, எத்தியோப்பியா, ரிவாண்டா ஆகிய நாடுகளில் வெளிவரும் முதல் தமிழ் படம் 'பைரவா' தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே டீசர், டிரைலர் ஆகியவற்றில் சாதனை செய்துள்ள 'பைரவா' தற்போது உலக அளவில் ரிலீசில் சாதனை செய்துள்ளது. அதேபோல் வசூலிலும் புதிய சாதனை நிகழ்த்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top