மதுரையில் அஷ்டமி சப்பரம்!

மதுரையில் அஷ்டமி சப்பரம்!

06-01-2021 மதுரையில் அஷ்டமி சப்பரம் நான்கு மாசி வீதிகளிலும் மீனாட்சி சுந்தரேஸ்வரருடன் வலம் வந்தது. இந்த அஷ்டமி சப்பரம் என்பது, “கல்லினுள் தேரைக்கும், கருப்பை உயிர்க்கும் புல்லுணவே தந்து போற்றும் தயாளன்” என்ற வாக்கினை மெய்ப்பிப்பதாகும். தேய்பிறை அஷ்டமியில் இந்த வைபவம் நடைபெறுகின்றது. 06.01.2021 முற்றிலும் பெண்களே அஷ்டமிச் சப்பரத்தை இழுத்தனர்.

அஷ்டமிச் சப்பர உலாவினை ”படியளக்கும் உலா” என்றே அழைக்கின்றார்கள். இந்த அஷ்டமி சப்பர பவனியை கண் குளிரக் கண்டால் பெரும் புண்ணியம் என்றும், வாழ்வாதாரம் குறைவற்று இருக்கும் என்றும் மக்களால் நம்பப்படுகின்றது!

ஊரடங்கின் காரணமாக, சுமார் பத்து மாதங்களுக்குப் பிறகு நடத்தப்பட்ட சப்பர பவனி இது என்பது குறிப்பிடத்தக்கதாகும். பவனியின் போது பக்தர்களுக்கு கேசரி, சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வெண் பொங்கல் ஆகியவை அன்னதானமாக வழங்கப்பட்டது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top