அடடடடா!!! டைட்டில வச்சவன்கூட இந்தளவுக்கு யோசிக்க மாட்டானே!!

அடடடடா!!! டைட்டில வச்சவன்கூட இந்தளவுக்கு யோசிக்க மாட்டானே!!

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் நேற்று வந்தாலும் வந்தது, இந்த ஃபர்ஸ்ட்லுக்கை பி.எச்.டி மாணவர்கள் போல் விஜய் ரசிகர்கள் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்துவிட்டனர். 

மெர்சல் என்ற தலைப்பின் எழுத்துக்கள் மாட்டின் கொம்பு மற்றும் வால்போல் உள்ளது என்றும், இளையதளபதி என்பது தளபதி ஆக புரமோஷன் பெற்றதையும் கண்டுபிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு கண்டுபிடிப்பாக இந்த படத்தின் டைட்டிலை தலைகீழாக வைத்து பார்த்தால் அதில் 'விஜய்' என்ற ஆங்கில எழுத்துக்கள் தெரிகின்றன என்று புதிய கண்டுபிடிப்பை ரசிகர்கள் கண்டுள்ளனர்.

அடேங்கப்பா! ஒரே ஒரு தலைப்ப வச்சுட்டு எவ்வளவு கண்டுபிடிக்கிறாங்க... 

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top