வைகுண்ட ஏகாதசி பற்றியதான கல்வெட்டுக்கள்!

வைகுண்ட ஏகாதசி பற்றியதான கல்வெட்டுக்கள்!

ஸ்ரீரங்கம் கோயிலில் முதலாம் குலேத்துங்கனது 40 ஆவது அரசாட்சி ஆண்டுக் கல்வெட்டு வைகுண்ட ஏகாதசி திருநாளை திருவாய்மொழி கேட்டருளும் பொதுத் திருநாள் என்று குறிப்பிடுகிறது. இரண்டாம் இராசாதிராசதேவன் (கி.பி. 1146 - 1163) ஒன்பதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு வைகுண்ட ஏகாதசித் திருநாள் நடந்தமையைத் தெரிவிக்கிறது. அது வைகுந்தத் திருநாளும், திருவேட்டைத் திருநாளும் நடைபெற்றதைக் குறிக்கின்றது.இரண்டாம் ராசேந்திரன் (கி.பி. 1216 - 1256) பன்னிரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும், வீரராமநாதனின் (கி.பி. 1263) எட்டாம் ஆட்சியாண்டில் கல்வெட்டும் ‘‘திருவத்தியயனம் பெருமாள் எழுந்தருளித் திருமாலை எடுப்பதற்கு’’ என்றும், ‘‘வைகுண்ட தாசர் திருநாள்கள் திருவத்தியயனத் திருநாள்களுக்கும் ஒரு திருமாலை சாத்துதற்கும்’’ என்றும் இவ்விழா பற்றிக் குறிக்கின்றன.

வைகுண்ட ஏகாதசியை ஒட்டிய இத்திருநாள் இராசாதிராச சோழனுக்கு முற்பட்டவனும் திருவரங்கம் கோயிலில் பல விழாக்களும், வைபவங்களும் கண்டவனுமான முதல் குலோத்துங்க சோழனால் ஏற்படுத்தப்பட்டது என்பது ஊகம்.அச்சுததேவமகாராயரின் (கி.பி. 1541) கல்வெட்டில் குறிக்கப்படும், பெரிய திருவத்தியயனம் வேதபாராயணம் என்ற தொடர்களும் திருவாய்மொழி வேதத்திருநாள் என்ற தொடர்களும் இவ்விழா நாள்களில் தேவங்களும், திருவாய்மொழியும் ஓதப்படும் இயல்பை உணர்த்துகின்றன.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top