பொதுமக்களின் ஆர்வம் குறைவு... உயரதிகாரி அதிருப்தி!

பொதுமக்களின் ஆர்வம் குறைவு... உயரதிகாரி அதிருப்தி!

தடுப்பூசி விஷயத்தில் பொதுமக்களின் ஆர்வம் குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிருப்தி தெரிலித்துள்ளார்.

கொரோனா காலகட்டத்தில் மருத்துவத் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு 'மயன் விருதுகள்' வழங்கும் நிகழ்வு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று நடைப்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கினார்
 
சென்னை ஐஐடியில் 198 நபர்களுக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். இன்று மேலும் ஒரு நபருக்கு அங்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
 
தடுப்பூசி விஷயத்தில் மக்களுடைய ஆர்வம் மிகவும் குறைந்துள்ளது. தடுப்பூசி போட்டு கொள்ளும்படி மக்களை வற்புறுத்த முடியாது அனைவரும் தாமாக முன்வந்து ஆர்வமாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். மாநிலத்தில் இன்னும் 40 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியையே செலுத்தி கொள்ளவில்லை.
 
தடுப்பூசி செலுத்தி கொள்ளாத அனைவருக்கும் மெசேஜ் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் இதுகுறித்து நினைவூட்டப்பட்டு, ஊசியை செலுத்தி கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
 
வெயில் காலத்தை பொருத்தவரை மக்களுக்கு கோடைகால முகாம் அமைக்கப்பட்டு தேவையான ஆலோசனைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் விலங்குகளுக்கும் குடிதண்ணீர் வழங்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். கோடையின் பாதிப்பில் இருந்து தப்பிக்க மக்கள் அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும் என்று ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top