‘கிராண்ட் சன் ஆப் நாகர்கோவில் எம்.எல்.ஏ காந்தி’ பைக்கில் கெத்து காட்டும் இளைஞர்

‘கிராண்ட் சன் ஆப் நாகர்கோவில் எம்.எல்.ஏ காந்தி’ பைக்கில் கெத்து காட்டும் இளைஞர்

திருமணம் செய்துகொள்ளாத எம்ஆர் காந்திக்கும் கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தனி பாசம் உள்ளது.

கிராண்ட் சன் ஆஃப் நாகர்கோவில் எம்எல்ஏ ஸ்ரீ எம்ஆர் காந்தி என்ற ஆங்கில வாசகத்துடன் பைக்கில் அமர்ந்திருக்கும் இளைஞர் ஒருவரின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைராக பரவி வருகிறது.
 
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொகுதியில் எம்எல்ஏவாக இருப்பவர் பாஜகவை சேர்ந்த எம்.ஆர்.காந்தி. 73 வயதாகும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவாரான இவர், 6 முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இதில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்ஆர் காந்தி தற்போது நாகர்கோவில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக சட்டசபைக்குள் நுழைந்துள்ளார்
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் எளிமையின் அடையாளமாக திகழும் இவர்,  கதர் வேட்டி ஜிப்பா அணிந்து காலில் செருப்பு கூட அணியாமல், மக்களுக்காக பணியாற்றி வருகிறார். தற்போது 73 வயதை கடந்துள்ள இவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில், கடந்த பல வருடங்களாக எம்ஆர் காந்திக்கு கார் டிரைவராக வேலை பார்த்து வருபவர் கண்ணன். எம்ஆர் காந்தி எம்எல்ஏ ஆவதற்கு முன்பே இவருக்கு பக்கபலமாக இருந்துள்ளார்.
 
இதனால் கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் எம்ஆர் காந்தி மிகுந்த பாசத்துடன் பழகி வந்துள்ளார். இதனை பயன்படுத்திக்கொண்டுள்ள டிரைவர் கண்ணனின் மகன் அம்ரிஸ் தனது பைக்கில் நம்பர் பிளேட் இருக்கும் இடத்தில் கிராண்ட் சன் ஆஃப் நாகர்கோவில் எம்எல்ஏ ஸ்ரீ எம்ஆர் காந்தி என்ற வாசகத்துடன் நகரை வலம்வந்துகொண்டிருக்கிறார். இது தொடர்பாக புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
 
இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், மீம்ஸ் மூலம் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். ஆனால் திருமணம் செய்துகொள்ளாத எம்ஆர் காந்திக்கும் கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தனி பாசம் உள்ளது. கண்ணனின் குடும்த்தினருக்கும் காந்தியின் மீது நல்ல பாசம் வைத்துள்ளனர். இதன் அடையாளமாகத்தான் தனது தாத்தா என்று அம்ரிஸ் பைக்கில் எழுதியுள்ளதாக பாஜகவினர் கூறி வருகின்றனர்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top