இலட்சியத்தை தொட்ட இலட்சக்கணக்கான அதிகாரிகள்!

இலட்சியத்தை தொட்ட இலட்சக்கணக்கான அதிகாரிகள்!

‘படிப்பு முடிந்தவுடன் நல்ல சம்பளத்தில் ஒரு வேலை’ கிடைக்க வேண்டும் என்கிற ஒரு கனவோடுதான் கல்லூரிக்குள் ஒவ்வொரு மாணவ மாணவியரும் அடியெடுத்து வைக்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் அந்த கனவு நனவாகி விடுவதில்லை. நம்முடைய தமிழ்நாட்டில் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் சுமார் பன்னிரண்டரை இலட்சம் பேர் பத்தாம் வகுப்பு தேர்வும், ஒன்பதரை இலட்சம் பேர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வும், ஐந்து முதல் ஏழு இலட்சம் பேர் கல்லூரி படிப்பினையும் முடிக்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஐம்பதாயிரம் அரசு பணியிடங்கள் காலியாகவே உள்ளது. இன்றைய தேதியில் சுமார் மூன்று இலட்சம் பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் இருக்கின்றன. மேலும், இன்றுவரை தற்போது வேலைவாய்ப்பு அலுவகத்தில் சுமார் எம்பத்தி இரண்டு இலட்சம் பேர் பதிவு செய்திருக்கிறார்கள்.

தற்போது தமிழகத்தில் உள்ள அரசாங்க வேலைகளுக்காக பல பணியிடங்களை அரசு சீனியாரிட்டிபடி பணி அமர்த்துவதை நிறுத்திவிட்டது. தற்போது எல்லோரும் அறிந்ததுபோல மத்திய மாநில அரசாங்கம் போட்டித் தேர்வுகளைக் கொண்டே பணியிடங்களை நிரப்பி வருகின்றன. அந்த வகையில் ஆங்கிலமோ தமிழோ.. முதல் தலைமுறை பட்டதாரியோ அல்லது பத்தாவது தலைமுறை பட்டதாரியோ. பொறியியலோ, கலை அறிவியலோ... அரசு அதுவெல்லாம் பார்ப்பது இல்லை.. யாராக இருந்தாலும் போட்டி தேர்வு ஒன்று தான்.’ என்கிறார் நேஷனல் இன்ஸ்டீடியூட் ஆஃப் பேங்கிங்கின் நிர்வாக இயக்குநர் திரு. வெங்கடாச்சலம் அவர்கள்.

மதுரை சிம்மக்கலில் கடந்த 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், சுமார் பத்தாண்டு காலத்திற்கும் மேலாக வங்கி மற்றும் அரசு போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்களை சிறப்பான முறையில் தயார்படுத்தி வருகின்றது. தற்போது மத்திய அரசும் மாநில அரசாலும் நடத்தப்பட்டுவரும் போட்டித்தேர்வுகள் குறித்தும், அதன் வாய்ப்புகள் பற்றியும் மேலும் அவரிடம் கேட்டபொழுது:

‘இன்று நம்முடைய இந்தியாவில் அதிகப்படியான தனியார் நிறுவனங்கள் இருந்தாலும், அவர்களால் இன்றும் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி படிப்பு முடித்துவரும் மாணவர்களுக்கு வேலையளித்திட முடியவில்லை. மேலும், இன்று கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களைவிட பொறியியல் கல்லூரியில் பயின்றவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் சரியாக வேலை கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தாலும் அது அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்றதாக இல்லை. எனவேதான், இன்று பெரும்பாலான இளைஞர்கள் அரசாங்கப் பணிகளின் பக்கம் தங்களின் பார்வையைத் திருப்பியுள்ளனர்.

ஆனால், அரசாங்க வேலை என்பது சட்டென கிடைத்திடும் ஒன்றல்ல. அதிகப்படியான கவனிப்பு, உழைப்பு, சரியாக வழி நடத்துதல் மிக முக்கியமானது. அரசாங்க பணியிடங்களைப் பொருத்தவரையில் மத்திய அரசும், மாநில அரசும் போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. அதில் முதற்படியாக IAS, IPS, IFS போன்ற உயர்மதிப்பிலான பணியிடங்களை மத்திய அரசு UPSC, (Union Public Service Commission) என்கிற தேர்வு ஆணையம் தேர்வு நடத்தி பணி அமர்த்துகிறது. இதில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 750 முதல் 1100 வரையிலான காலிப்பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளை கல்லூரியில் இறுதி ஆண்டில் பயிலும் மாணவர்கள்கூட எழுதலாம்.

இன்று பெரும்பாலான இளைஞர்கள் வேலை ஏதுமே கிடைக்கவில்லை, அரசாங்க தேர்வுக்காவது படித்து அதற்கு போவோம் என்கிற எண்ணத்தில் படிக்கிறார்கள். ஒருவர் அரசாங்க வேலைக்கு செல்ல வேண்டுமென விரும்பினால், அதற்கான ஆர்வத்தை கல்லூரியில்தான் தேர்ந்தெடுக்கும் துறை தொடங்கி அதற்காக பயிற்சிவரை சரியான முறையில் செயல்பட வேண்டும்.

UPSC-க்கு அடுத்த நிலையாக இடங்களை SSC (Staff Selection Commission) பூர்த்தி செய்கிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெருவோர்தான் மத்திய அரசில் உள்ள மற்ற அனைத்து கிரேடிலும் பணிப்புரிபவர்கள். இந்தியாவிலேயே அதிகப்படியாக பணியாளர்களை கொண்டுள்ள மற்றொன்று இந்திய ரயில்வேஸ். ரயில்வேயைப் பொருத்தவரையில் ஸ்டேஷன் மாஸ்டர், ட்ராபிக் அப்ரென்டீஸ், TTE, ECRC போன்ற பணியிடங்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இதில் தகுதிபெற RRB (Railway Recruitment Board) நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். இந்திய இரயில்வேயைப் பொருத்தவரை அவை 17 ஜோன்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் தனித்தனியே தங்களின் தேவைக்கேற்ப காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்கின்றனர். இதில் உள்ள தேர்வுகளுக்கு பத்தாம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் தகுதியானவர்கள்.

மேற்கூறப்பட்ட அனைத்து போட்டித்தேர்வுகளிலும் கேட்கப்படும் கேள்விகளுக்கு கல்லூரிகளில் படித்த படிப்பிற்கும் துளியளவிலும் சம்பந்தமிருக்காது. போட்டி தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள விரும்புவோர் Mathematics, Reasoning, General Knowledge, General English என்கிற நான்கில் அப்பலுக்கற்ற தகவல் அறிவைக் கொண்டிருக்க வேண்டும்.

அடுத்த முக்கியப்பங்கினை வகிக்கும் ஒரு அரசாங்கப் பணியென்றால் அது வங்கி வேலைகள். ஒவ்வொரு ஆண்டும் இந்தியளவில் சுமார் 50000 முதல் 75000 காலிபணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது டிஜிட்டல் இந்தியா திட்டத்தை நமது பாரத பிரதமர் மோடி அவர்கள் செயல்படுத்தியுள்ளார். இதனால் பணமில்லா பரிவர்த்தனை அதிகளவில் ஊக்கப் படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழிற்நுட்பம் தெரிந்த இளைஞர்கள் அதிகளவில் வங்கி வேலைகளுக்கு தேவைப்படுகிறார்கள். மேலும் புதிய கிளைகளை அதிகளவில் தொடங்கவும் வங்கிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் வேலைவாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும். இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியாக ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இதே விதிமுறைகள்தான் அரசாங்க காப்பீடு நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

ஒருசிலர், எனக்கு கணிதத்திலும், ஆங்கிலத்திலும் அதிகமாக புலமை இல்லை, என்னால் அரசாங்க தேர்வுகளை எழுத முடியாதா? என்கிற கேள்வி எழுப்புவதுண்டு. நிச்சயமாக மத்திய அரசிற்கு இணையான தேர்வுகள் நம்முடைய தமிழகத்திலேயே எளிய முறையில் தமிழிலேயே நடத்தப்படுகிறது. அதுதான் TNPSC. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசாங்க காலிபணியிடங்களையும் நிரப்புபவர்கள் இவர்களே. தமிழ்நாடு தேர்வு ஆணையம் பொருத்தவரை, ஒவ்வொரு பதவியும் ஒரு குரூப்பாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் குரூப்-1 தேர்வு எழுதுவோர் துணை ஆட்சியர், துணை காவல் ஆணையர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர், கூட்டுறவுத் துணை பதிவாளர், தொழிலாளர் அலுவலர், தொழிற்சாலை ஆய்வாளர், உதவி இயக்குனர் (கால்நடை பராமரிப்பு), உதவி இயக்குனர் (தொழில் வணிகத் துறை) போன்ற பதவிகளைப் பெறமுடியும். சுமார் 6 முதல் 10 ஆண்டு காலங்களில் அவர்கள் IAS ரேங்கிற்கு செல்லவும் வாய்ப்புள்ளது. இதற்கு ஆறாம் வகுப்பு முதல் பணிரெண்டாம் வகுப்பு வரையிலான பள்ளி புத்தகமும், அன்றாடம் செய்தித்தாளையும் வாசித்து பொதுஅறிவை வளர்த்துக்கொண்டாலே எளிதில் தேர்வாகலாம். அடுத்து குரூப்-2 தேர்வுகள், இதில் சப்-ரிஜிஸ்டார், நகராட்சி ஆணையர், ஜுனியர் வேலைவாய்ப்பு அலுவலர் போன்ற பணியிடங்கள் உள்ளன. இதற்கு ஆறாம் வகுப்பு முதல் பணி ரெண்டாம் வகுப்பு வரையிலான பள்ளி புத்தகமும், அன்றாடம் செய்தித்தாளையும் வாசித்து பொதுஅறிவை வளர்த்துக்கொண்டாலே எளிதில் தேர்வாகலாம். அடுத்து அனைவரும் அறிந்த குரூப்-4 தேர்வு. இதற்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பே போதுமானது. பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் எந்தவித தயக்கம் இன்றி இந்தத்தேர்வு எழுதலாம். இதில் தேர்ச்சிப் பெறுவோருக்கு ஜுனியர் அசிஸ்டென்ட், டைப்பிஸ்ட், ஸ்டெனோ வேலைகள் கிடைக்கின்றன.

குருப்-4 தேர்வுகளின் பாடத்திட்டத்தையும் கல்வித் தகுதியையும் கொண்டுள்ள மற்றொரு தேர்வு VAO. கிராமப்புறத்தின் கலெக்டர் என்றழைக்கப்படும் VAO, கிராமங்களில் முக்கியப்பங்கினை வகிப்பார். காவல்துறைக்கு கான்ஸ்டபில் பதிவிக்காக தேர்வை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயம் நடத்தி நேரடியாக நிரப்புகிறது. இந்த தேர்வும் குருப்-4-க்கு நிகரான ஒன்றுதான். கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி காவல்துறையில் இணையலாம்.

இன்று அதிகப்படியாக இளைஞர்கள் IT நிறுவனங்களுக்கும், பெங்களுரூ போன்ற பெருநகரங்களுக்கும் செல்ல வேண்டுமென்கிற எண்ணத்திலிருந்துமாறி, வங்கி மற்றும் மற்ற அரசாங்க வேலைகளுக்கு செல்ல தங்களைப் தயாரிப்படுத்திக் கொள்கிறார்கள். அதிலும் குறிப்பாக, அதிகமாக பொறியியல் கல்லூரி மாணவர்களே இதில் முக்கியப் பங்கினை வகிக்கிறார்கள். அதிகமான மாணவர்களை ஊக்குவித்து அரசாங்க வேலைக்கு தயார்படுத்துவதே எங்களின் நோக்கம்.

இதனால் கடந்த 2015-ம் ஆண்டு மாட்டுத்தாவணியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் அருகில் புதியதாக கல்லூரி தரத்திலான ஒரு கட்டிடத்தை கட்டியுள்ளோம். இந்த வளாகத்தில் லேப் வசதி, நூலகம், புத்தக நிலையம், சிற்றுண்டி உணவகம், 24 மணி நேரம் மாணவர்கள் இருந்து படிக்க கூடிய படிப்பறை வசதி போன்றவற்றை சிறப்பாக ஏற்படுத்தியுள்ளோம். இங்கு ஒரு முறை கட்டணம் செலுத்தி சேர்பவர்கள், பணியில் அமரும்வரை இங்கே படிக்கலாம். சந்தேகங்களை தீர்க்கும் வகையில் முழுநேர ஆசிரியர்கள் அதுவும் 10 ஆண்டு அனுபவமிக்க ஆசிரியர்களை பணியமர்த்தியுள்ளோம்.

அடிக்கடி மாதிரி தேர்வுகளையும் நடத்தி வருகிறோம். அத்தோடு கல்லூரிக்களுக்கும் சென்று இறுதி ஆண்டு மாணவர்கள் மத்தியில் அரசாங்கத்தின் வேலை வாய்ப்புகள் பற்றியும், அதை எளிதில் எட்டிப்பிடிக்கும் வழிமுறைகளையும் எடுத்துரைத்து வருகிறோம்.’ என கூறினார்.

தொடர்புக்கு: 9047034271

 

Tags: News, Madurai News, Academy, Institute, Education

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top