மாமதுரை மகுடத்தில் மக்களைக் கவரும் ஓர் வைரக்கல் விஷால் டி மால்!

மாமதுரை மகுடத்தில் மக்களைக் கவரும் ஓர் வைரக்கல் விஷால் டி மால்!

புராண காலந்தொட்டே தெய்வங்கள் அரசாட்சி செய்த திருத்தலமாகவும், முச்சங்கங்களால் முத்தமிழையும் பேணி வளர்த்த கலை கலாச்சார மையமாகவும், மாமன்னர்களின் நல்லாட்சியில் வரலாற்றில்  முத்திரை பதித்த வீரமண்ணாகவும் உலக அதிசய தரவரிசையில் கலை நுணுக்கங்களோடு வடிவமைத்துள்ள ஸ்ரீ மீனாட்சி திருக்கோயில் அமைந்துள்ள, மதுரை நகர் ஒவ்வொரு காலகட்டத்திலும் வரலாற்றில் பல சிறப்புகளை பதிவு செய்து வருகிறது. 

நாகரீகம் வளர்ச்சியடைந்த இக்காலக்கட்டத்திலும் பல்வேறு சிறப்புகளை படிப்படியாக பெற்று நம் மண்ணுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர் நம் மண்ணின் மைந்தர்கள். அந்த வகையில் மதுரையின் மகுடத்தில் மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக, பதிக்கப்பட்ட வைரக்கல்லாக மக்களை கவர்ந்திழுக்கிறது விஷால் மால். 

மதுரை தல்லாகுளம் பகுதியில் இதன் பிரம்மாண்டமான உயர்ந்த கட்டிடம் நம்மை வரவேற்கிறது. உள்ளே நுழைந்தவுடன் விசாலமான அரங்குகளின் குளுமை, மன இறுக்கத்தோடு வருபவர்கள் மனங்களில் குதூகலம் எனும் விசையை தட்டி விடுகிறது.

பளபளக்கும் தரைத்தளத்தில் குட்டி கார், ஜீப்களை, உல்லாசமாக ஓட்டி மகிழும் குழந்தைகள், அண்ணார்ந்து பார்த்தால் கேளிக்கை அம்சங்கள் நிரம்பிய நான்கு அடுக்குகளின் உச்சத்தில் ஜொலிக்கும் அரங்கு விளக்குகள், அடுத்தடுத்த தளத்திற்கு சொகுசாய் செல்ல Escalatorகள், எஸ்க லேட்டர்களில் கால் வைத்தவுடன் நம் மனமும் சேர்ந்து உயரே பறக்கிறது. குழந்தைகளும் இளைஞர்களும் பெரியவர்களும் உல்லாசமாக உற்சாகத்துடன் அங்குமிங்கும் நடனமாடுவதைப் பார்க்கும் போது, அந்த ஆனந்த அலைகள் நமக்குள்ளும் தொற்றிக் கொள்கிறது.

இளைஞர்களை கவரும் நவநாகரீக உடைகள் நிரம்பிய ஷாப்பிங் பிரிவுகள், குட்டி செல்வங்களை கை கட்டி ஆர்ப்பரிக்க வைக்கும் பிரத்யேக குழந்தைகளுக்கான பிரிவுகள், வீடியோ கேம்ஸ், மேக்னட் டென்னிஸ் என்று விதவிதமான விளையாட்டுகள், எலக்ட்ரானிக் பிரிவுகள் கண்கவரும் ஆடை அணிகலன்கள் மற்றும் நம் தேடுதல்களைப் பூர்த்தி செய்யும் ஷாப்பிங் பிரிவுகள், குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பேசி அளவளாவி உண்டு மகிழ விதவிதமான உணவுகளை வழங்கும் உணவகங்கள்.

இது மட்டுமல்ல “ஜாலியாக ஷாப்பிங் பண்ணியாச்சு, குழந்தைகள் விளையாடியாச்சு, ரசித்து ரசித்து சாப்பிட்டா ச்சு, அப்படியே ஒரு சினிமாவையும் ரிலாக்ஸாக பார்த் துட்டு போனால் எப்படி இருக்கும்” என ஏங்குவோரை திருப்திபடுத்தும் வகையில் மேல் தளத்தில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து மினி தியேட்டர்கள். அப்பப்பா! சிங்கபூரிலும் மலேசியாவிலும் இருக்கின்ற மாதிரி நம்ம மதுரையிலும் இப்படியொரு “மால்” இருக்கிறது என்பது வியக்க வைக்கிறது. 

மக்கள் மனம் கவர்ந்த இந்த மாலை உருவாக்கிய திரு.இளங்கோவன் அவர்களை சந்தித்த போது இதற்கு விதையிட்டு வளர்த்த நிகழ்வுகளை பற்றிக் கூறினார். 

“நமக்கும் நம் வீட்டிற்கும் என்ன தேவை அதை எப்படி நிறைவேற்றுவது என்பது மட்டுமல்லாது நம் ஊருக்கும் என்ன தேவை என நினைக்க தோன்றியது. காசிக்கு அடுத்த ஒரு புராதன சிறப்பு வாய்ந்தது நமது மதுரை. தமிழகத்தில் இரண்டாவது ஒரு பெரு நகரமாக அதிக மக்கள் தொகையுடன் இருந்து வருகின்றது. ஓர் நகரம் சிறப்பாக அமைய அதன் உள் கட்டமைப்பு (Infrastrictire) சிறப்பு அம்சங்களுடன் அமைந்திருக்க வேண்டும். இது பற்றி ஏழு வருடங்களுக்கு முன்னால் என் நண்பருடனும் தொழில் அமைப்புகளுடனும் கலந்தலோசித்த போது சர்வதேச விமான நிலையம், நான்கு வழி சாலை, ஐ.டி. கம்பெனிகள், தொழில் கூடங்கள் Factoryகள் போன்ற பல்வேறு அம்சங்கள் பற்றி விவாதித்து, அவற்றை எப்படி மதுரைக்கு கொண்டு வரலாம் என்பது பற்றி ஆராய்ந்தோம்.

அதில் ஐ.டி. கம்பெனிகளும் பாக்டரிகளும் இன்னும் அதிக அளவில் மதுரைக்கு வர வேண்டுமென்றால் மேனேஜ்மெண்ட் மேலும் மிடில் மேனேஜ்மெண்ட் 

மக்களுக்கும் எண்டர்டெய் மென்ட்டுக்கு என்ற ஒரு நல்ல இடம் கட்டாயம் தேவை. அதில் எனக்கு அனுபவம் உள்ள கன்ஸ்டரக்ஸன் துறையில் என்ன செய்யலாம் என நானும் என் மனைவியும் யோசித்த போது, இம்மாலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எங்கள் மனதிற்குள் பதிந்தது. 

விசாலாட்சி என்ற அப்பத்தா பெயரால் விஷால் டி மால் என பெயரிட்டு 2012-ம் ஆண்டு திறப்பு விழா நடத்தினோம். நான்கு ஆண்டுகளில் கார் பார்க்கிங் தரை தளத்தில் கூடிய நான்கு மாடி கட்டிடமாக சுமார் 50 கோடி ரூபாய் செலவில் கட்டி முடித்தோம். ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்கே சிறப்பாக பணி புரிந்து வருகின்றார்கள். தமிழ கத்தில் சென்னை, கோயம்புத்தூரை அடுத்து ஐந்து தியேட்டர்களுடன், பத்தாயிரம் சதுரடி ஸ்நூக்கர் பவுலிங் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அமையப் பெற்ற மால் நம் மதுரையில் தான் உள்ளது. இதனால் புதுக்கோட்டை, காரைக்குடி என மதுரையை அடுத்துள்ள ஊர்களிலும், கிராமங்களிலிருந்தும், ஏன் வெளிநாட்டிலிருந்தும், மக்கள் வந்து செல்லும் முக்கிய டூரிஸ்ட் மையமாக திகழ்கிறது. நாம் வெளிநாடுகளிலுள்ள மால்களில் போட்டோ எடுப்பதை விடுத்து தற்போது விஷால் டி மாலில் வெளிநாட்டினர் வந்து போட்டோ எடுத்து கொள்வதைப் பார்க்கிற போது பெருமையாக உள்ளது. 

டென்சனோடு வாழ்க்கை நடத்தும் மக்கள் மன இறுக்கத் தோடு உள்ளே வந்து விட்டு மகிழ்ச்சியுடன் மனம் நிறைந்த திருப்தியுடன் வெளியே செல்வதை பார்க்கிற போது, நம் மக்களுக்கு சரியான தேவையை பூர்த்தி செய்துள்ளேன் என்கிற திருப்தியும் பெருமையும் ஏற்படுகிறது. 

எனது எதிர்கால திட்டம் என்னவெனில், நம் மக்கள் கொடைக்கானல், மூணாறு, ஊட்டி என கோடைவெயிலுக்கு வெளியூருக்கு செல்வதை தவிர்க்க அம்மாதிரியான ஒரு குளுமையான ஹில் ஸ்டே சனை மதுரை அருகிலேயே உருவாக்கி, வீக் எண்டுக்கு எளிதாக மக்கள் உல்லாசமாக அனுபவிக்க திட்டம் வகுத்துள்ளேன். அந்த ஹில் ஸ்டே சனிலிருந்து பார்த்தாலே ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோபுரங்களும் மதுரை நகரங்களும் உள்ள காட்சிகளும் தெரியும் வண்ணம் செய்திடத் திட்டமிட்டுள்ளேன். 

விஷால் டி மால் ரிலாக் ஷேசன் சென்டராக மக்களின் மனதை சந்தோஷத்தால் நிரப்புகிறது. உற்சாகத்தை கொடுப்பத்தோடு இந்த (Environment) சூழல் மக்களின் ஆரோக்கியத்திற்கும் ஒரு பக்கபலமாக உள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொருவரும் தம்மை பற்றி மட்டும் யோசிக்காமல் தம் ஊருக்கு பெருமை சேர்க்கும் விஷயங்களை செயல்படுத்துவதைப் பற்றி யோசிக்க வேண்டும். வாழ்க்கையில் நாம் அடைய வேண்டிய வெற்றி கிடைக்கும் வரை போராட வேண்டும். நினைத்த காரியம் முடியும் வரை போராடு. இதை மனதில் பதித்துக் கொண்டால் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனவலிமையும் தன்னம்பிக்கையும் நம்முள் இருக்கும்” என மக்களுக்கு அறிவுரை கூறி வாழ்த்தி வழி அனுப்பினார் திரு.இளங்கோவன் அவர்கள். மதுரை மக்களுக்காக ஊட்டி, கொடைக்கானல் சூழலை மதுரைக்கு அருகிலேயே கொண்டு வரும் தீவிர முயற்சியில் அடியெடுத்து வைக்கும் நல்லதொரு திட்டத்தை செயல்படுத்துவதில் முனைந்திருக்கும் அவரை ஊக்குவித்து வாழ்த்த அழையுங்கள்: 0452-2537772, 9872968284

Tags: News, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top