வீட்டு அலங்காரத்திற்கு My Home!

வீட்டு அலங்காரத்திற்கு My Home!

சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டுமென்பது நம் எல்லோரின் வாழ்க்கை கனவாக இருக்கிறது. அக்கனவு உண்ண, உறங்க, குளிக்கத் தேவையான அறைகள் மட்டும் கட்டி முடித்த பின் முடிந்துவிடுகிறதா? இல்லை! இனிமையான இல்லத்தை மேலும் இனிமையாக்குவது வீட்டின் உள்அலங்காரங்கள்தான்.

இன்று, எவ்வளவு தான் வேலைப்பணியினால் சுமைகள் இருந்தாலும், வீட்டிற்குள் நுழையும்போது அவை அனைத்தும் பறந்திட வேண்டும். அப்போதுதான் நம்முடைய வீடு முழுமையடைகிறது. அவ்வாறு நம் இல்லத்தினை முழுமையடையச் செய்ய, தம்முடைய “மை ஹோம்” என்னும் நிறுவனத்தின் மூலம் தமிழகத்திலேயே முதன்முதலாக துவங்கப்பட்ட இவோக் விற்பனை மையத்தை துவங்கிய அந்நிறுவனத்தின் பங்குதாரர் திரு. கண்ணதாசன் அவர்களை சந்தித்தோம்.

மக்களின் உள்அலங்காரத் தேவை குறித்தும், பிராண்டட் தயாரிப்புகளின் பங்களிப்பு குறித்தும் அவரிடம் கேட்டபொழுது: ‘இன்று மக்கள் வீட்டின் உள்அலங்காரங்கள் செய்வதற்கென தனி கவனத்தை அளித்து வருகிறார்கள். இருப்பினும் தென்தமிழகத்தைப் பொருத்தவரை மக்களின் தேவை அதிகமாக உள்ளது. எனவே, மக்கள் தரமான பொருட்களை வாங்குவதில் தயக்கம் காட்டுவதில்லை. என்றாலும் தரமான சோஃபாவோ டைனிங் டேபிளோ வாங்க வேண்டுமென்றால் சென்னை, பெங்களுரூ போன்ற ஊர்களுக்கு பயணிக்கிறார்கள். இது அவர்களுக்கு ஒரு அலைச்சல் தான். ஒருவேளை வாங்கிய பொருட்களில் ஏதாவது குறையிருந்தால் அதை மீண் டும் அந்த இடத்திற்கே கொண்டு போக வேண்டும். இதுவும் சிரமம்தானே. இதனை மையமாக கொண்டு தான் “மை ஹோம்” என்னும் வீட்டின் உள்அலங்கார பொருட்களின் விற்பனை மையத்தை துவங்கினோம்.

பொதுவாக, நம்முடைய வீட்டிற்கு வருபவர்களை வரவேற்பறைக்கு அழைத்து வருவது வழக்கம். வீட்டிற்கு முக்கிய அழகாக கருதப்படுவது வரவேற்பறைதான். அந்த இடத்திற்கு அழகு சேர்ப்பது சோஃபாக்கள். இன்று நம்முடைய தமிழகத்திலே எவ்வளவோ நிறுவனங்கள் சொந்தமாகவும், வெளிநாடுகளிலிருந்தும் சோஃபாக்களை இறக்குமதி செய்து விற்கிறார்கள். இவை தரமுள்ளதாக இருந்தாலும் நம்முடைய தேவையை முழுமையாக தீர்வு செய்கிறதா? உதாரணத்திற்கு ஒரு செட்டாக வரும் சோஃபாவில் ஒரு பகுதியை மட்டும் இவர்களிடம் வாங்கமுடியாது. ஆனால் மக்களின் மத்தியில் நல்லதொரு பெயரை சம்பாதித்த ஒரு நிறுவனம், அந்த பெயரை என்றும் தக்க வைத்துக்கொள்ள மக்களின் தேவையை மட்டுமே மையப்படுத்தி செயல்படும். அந்த வகையில் பிரபலமான ஹின்டுவேர் நிறுவனத்தின் இவோக் தயாரிப்புகள் சிறப்பை பெற்றுவருகிறது. இவோக்கை பொருத்தவரையில், இந்நிறுவனம் சோஃபா மற்றும் டைனிங் டேபிள் தயார் செய்ய சீஷேம் வுட் மற்றும் ரப்பர் வுட் பயன்படுத்தி மக்களின் தேவையை அறிந்து, இந்தியாவின் வெப்பநிலைக்கு ஏற்றவாறு தயார் செய்கின்றது. சாதாரணமாக இதுபோன்றவை எம்டிஎப் என்றழைக்கப்படும் மரத்தூளாலும், ப்ளைவுட்டாலும் தான் தயார் செய்யப்படும்.

மக்களை பொருத்தவரை பிராண்டட் என்றாலே விலை அதிகம் என்கிற ஒரு பக்க கருத்தை மட்டுமே சிந்திக் கிறார்கள். ஆனால் நாம் இறக்குமதி செய்யப்பட்ட தயாரிப்புகளையோ, அல்லது ஆர்டரின் பெயரில் தயார் செய்யப்பட்ட சோஃபாவையோ ஒப்பிட் டுப் பார்த்தால், பிராண்டட் பொருட்களின் தனித்துவம் தெரியும். மேலும், பிராண் டட் பொருட்களின் விலையை விற்பனையாளர் நிர்ணயிக்க முடியாது. அவற்றை அந்த குறிப்பிட்ட நிறுவனம்தான் முடிவு செய்யும். அதுபோலத்தான் இவோக்கும். இந்தியாவில் சுமார் 30 விற்பனை மையங்களை கொண்டுள்ள இவோக் தயாரிப்புகள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே விலைதான். மேலும், இன்று இணையதளத்திலேயே மக்கள் விலையையும், அந்த குறிப்பிட்ட பொருட்களின் விவரத்தையும் அறிந்து கொள்ளும் வசதியும் உள்ளது.

இவோக்கோடு சேர்த்து, இந்தியாவின் முன்னணி கார்பெட் மற்றும் மேட் தயாரிக்கும் அப்செஷன் நிறுவனத்தின் தயாரிப்புகள், ஸ்வயம் நிறுவனத்தின் தயாரிப்புகள், ரேமண்ட்ஸ் நிறுவனத்தின் மெத்தை விரிப்புகள், அமெரிக்க நாட்டைச் சார்ந்த சிமன்ஸ் நிறுவனத்தின் மெத்தை, நில்கமலின் பிளாஸ்டிக் நாற்காலிகள், நீளத்தை உயர்த்திக் கொள் ளும் வசதிக்கொண்ட டெக்கோ வின்டோ நிறுவனத்தின் கர்டெயின் கம்பிகள், ஐரிஸ் என்னும் இந்தியா நிறுவனத்தின் 100 வகைகள் கொண்ட பெஃர்ப்யூம் என தென்தமிழகத்திலே நாங்கள் மட்டுமே இவை அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்திருக்கிறோம். இன்று பெரும்பாலான வணிகங்கள் ஆன்-லைன் பக்கம் திரும்பியுள்ளது. இது மக்களின் தொழில்நுட்ப வளர்ச் சியை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. மேலும், ஒரு ஆய்வின்படி தற்போது மதுரையில் மட்டுமே ஒரு மாதத்திற்கு சுமார் 35 லட்சம் ரூபாய் வரை பர்னிச்சர்கள் ஆன்-லைனில் மட்டும் வாங்கப்படுகிறது. இது ஒருபுறம் நன்மையளித்தாலும், எதிர்பாராத சூழலில் ஏதாவது கஷ்டத்தை அளிக்கிறது. சோஃபாவை நாம் தொட்டு அதன் தன்மையை பற்றி அறிந்து வாங்கினால் தான் அதன்மூலம்,  கிடைக்கும் சவுகரியத்தை நாம் முழுமையாக அனுபவித்திட முடியும்.’ என கூறினார்.

தொடர்புக்கு: 9843053966

Tags: News, Beauty, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top