உக்ரைனிடம் 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள தானியங்கள் இருப்பு!

உக்ரைனிடம் 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள தானியங்கள் இருப்பு!

ரஷ்யா-உக்ரைன் போர்: போருக்கு மத்தியில், உக்ரைனிடம் தேங்கிக் கிடக்கும் தானியங்களை ஏற்றுமதி செய்யும் நோக்கில் உக்ரைனும் ரஷ்யாவும் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா இந்த ஒப்பந்தத்தை வரவேற்றார், ஆனால், ரஷ்யா மீது நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்துள்ள அவர், எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதாக கூறினார். உக்ரைன் மற்றும் ரஷ்யா தானியங்கள் ஏற்றுமதி தொடர்பாக துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகளுடனான முக்கிய ஒப்பந்தம் நிறைவேறிய பிறகு, உக்ரைனிடம் உள்ள தானிய இருப்பு பற்றி, அந்நாட்டு அதிபர் Volodymyr Zelensky வெள்ளிக்கிழமை (2022 ஜூலை 22) அறிவித்தார்.

உக்ரைனில் சுமார் பத்து மில்லியன் டாலர் மதிப்புள்ள தானியங்கள் விற்பனைக்கு இருப்பதாக அறிவித்தார். கருங்கடல் வழியாக உக்ரைன் செய்து வந்த தானிய ஏற்றுமதி, போரினால் தடைபட்டதால், உலகளாவிய உணவு நெருக்கடி ஏற்பட்டது. இந்த சிக்கலை தீர்க்கும் நோக்கத்தில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
 
தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்க வகை செய்யும் இந்த ஒப்பந்தத்தில் உக்ரைன், ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகள் கையெழுத்திட்டன. துருக்கி, இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 
 
தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் முடிந்த பிறகு பேசிய உக்ரைன் அதிபர், ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் தாக்குதலை எதிர்த்து நிற்கும் சக்தி உக்ரைனுக்கு உண்டு என்பதை இந்த உடன்பாடு காட்டுவதாக தெரிவித்தார். ஐ.நா ஆதரவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டு விளைச்சலான தானியங்களில் சுமார் 20 மில்லியன் டன்கள் ஏற்றுமதி செய்யப்படும் என்று ஜெலென்ஸ்கி மேலும் குறிப்பிட்டார்.
 
தினசரி இரவு நாட்டு மக்கலுக்கு வீடியோ உரையாற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, உக்ரைனின் கருங்கடல் வழியிலான தானிய ஏற்றுமதியைத் தடுக்கவும், உலகளாவிய உணவு நெருக்கடியைத் தணிக்கவும் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஒரு தானிய ஒப்பந்தத்திற்கு உத்தரவாதம் அளிக்க ஐ.நா. பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறினார்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top