வங்க தேசத்தில் ISKCON கோவில் மீது பயங்கர தாக்குதல்!

வங்க தேசத்தில் ISKCON கோவில் மீது பயங்கர தாக்குதல்!

இந்து சிறுபான்மையினரை பாதுகாக்க வங்கதேச அரசு  வாக்குறுதிகள் அளித்து வரும் போதிலும், தொடர்ந்து இந்து கோவில்கள் மற்றும் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. 

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள கோவில் ஒன்று வியாழக்கிழமை இரவு தீவிரவாதிகளால் சூரையாடப்பட்டது. அடிப்படைவாதிகள் கோயிலை சூறையாடி சூறையாடினர்.  தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
டாக்காவில் மோகன் சஹா தெருவில் உள்ள இஸ்கான் ராதாகாந்தா கோயிலை ஹாஜி ஷபியுல்லா தலைமையில் திரண்ட 200க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 7 மணியளவில் தாக்கி, சேதப்படுத்தி, சூறையாடினர் என்றும்,  இந்த தாக்குதலில் ஏராளமான இந்துக்கள் காயம் அடைந்தனர் என்றும் கூறுகின்றனர்.
 
வங்கதேசத்தில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, நவராத்திரியின் போது சில துர்கா பூஜை பந்தல்கள் தாக்கப்பட்டன. அதனிடன் பல கோவில்களும் தாக்கப்பட்டன. இந்த வன்முறையில் 2 இந்துக்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். அப்போதும் கூட டாக்காவில் உள்ள இஸ்கான் கோவில் தாக்கப்பட்டது.
 
பங்களாதேஷில் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகப் பணியாற்றும் ஏகேஎஸ் அமைப்பின் அறிக்கையில், கடந்த 9 ஆண்டுகளில் வங்கதேசத்தில் இந்துக்கள் மீது சுமார் 4000 தாக்குதல்கள் நடந்துள்ளன என கூறப்பட்டுள்ளது. இவற்றில் 1678 மத காரணங்களுக்காக மட்டுமே. இதைத் தவிர மற்ற கொடுமை சம்பவங்களும் அரங்கேறின.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top