அமெரிக்க புதிய அதிபரின் 15-முதல் கையெழுத்துக்கள்!

அமெரிக்க புதிய அதிபரின் 15-முதல் கையெழுத்துக்கள்!

அமெரிக்காவின் 46-ஆவது அதிபராக ஜோ பைடனும் (78) முதல் பெண் துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கமலா ஹாரிஸும் (56) கடந்த ஜனவரி-20-ம் தேதி புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட முதல் நாளிலேயே, டொனால்ட் டிரம்பின் கொள்கைகளை அப்படியே தலைகீழாக மாற்றும் 15 உத்தரவுகளில் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவது தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் பிறப்பித்திருந்த உத்தரவை மாற்றி, பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்று ஜோ பைடன் அறிவித்துள்ளார். அதற்கான உத்தரவிலும் கையெழுத்திட்டுள்ளார். அதில்லாமல், அமெரிக்க - மெக்சிகோ எல்லைச் சுவர் கட்டுமானம் நிறுத்தம், அமெரிக்க - கனடா எரிவாயு இணைப்பு திட்டமான கீஸ்டோன் எக்ஸ்.எல். பைப்லைன் திட்டம் ரத்து உள்ளிட்ட உத்தரவுகளிலும் கையெழுத்திட்டுள்ளார்.
 
குடியேற்றம், இனவாத பிரச்னைகள் உள்ளிட்ட விவகாரங்களிலும் டிரம்பின் முடிவுகளை மாற்றும் உத்தரவுகளில் பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top