அமைச்சர் சேகர்பாபு மகள் காதல் திருமணம்

அமைச்சர் சேகர்பாபு மகள் காதல் திருமணம்

வீட்டை விட்டு மீண்டும் வெளியேறி காதல் திருமணம் செய்துகொண்ட  அமைச்சர் சேகர்பாபு மகள் கர்நாடகாவில் தஞ்சம் அடைந்துள்ளார். தங்களுக்கு  பாதுகாப்பு வழங்க கோரி பெங்களூரு போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் சேகர் பாபு. இவரது மகள் ஜெயக்கல்யாணி. இவர் தனக்கு பிடித்தமானவரை காதல் மணம் செய்துகொண்டுள்ளார். இது அமைச்சரின் குடும்பத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், காதலுலருடன் பெங்களூர் சென்று தஞ்சமடைந்துள்ளார். அத்துடன், தனது தந்தையிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல் பந்த்தை சந்தித்து மனு கொடுத்துள்ளார் இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பின்னர் பெங்களூரு போலீஸ் கமிஷனர் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபுவின் மகள், “நான் ஜெயக்கல்யாணி அமைச்சர் சேகர்பாபுவின் மகள். மருத்துவராக இருக்கிறேன். இவர் எனது கணவ சதீஷ். டிப்ளமோ படித்திருக்கிறார்.  நாங்கள் இருவரும் 6 வருடங்களாக காதலித்து வருகிறோம். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். நாங்கள் இருவரும் விருப்பப்பட்டு தான் திருமணம் செய்துகொண்டோம்.

ஏற்கனவே நாங்கள் திருமணம் செய்ய விரும்பி, கடந்த ஆண்டு (2021)  ஆகஸ்ட் மாதம் நாங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினோம். ஆகஸ்ட் 18-ம் தேதி நாங்கள் இருவரும் மும்பையில் இருந்தோம். அப்போது எனது தந்தை இவருக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்தார். இவர் மீது தவறான புகார் அளித்து நிறைய வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.  அத்துடன், எனது தந்தை எங்களை தேடி கண்டுபிடித்து புனேவில் தங்கியிருந்த எங்களை பிடித்து விட்டார். பின்னர் சென்னை அழைத்து வந்தனர். எனது காதலரை சட்டத்துக்கு புறம்பாக திருவள்ளூரில் 2 மாதம்  போலீஸ் உதவியுடன் அடைத்து வைத்தனர். அத்துடன், அவரது பெற்றோர் மற்றும் நண்பர்களை போலீஸார் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தினர். இதற்கு எல்லாம் எங்களிடம் ஆதாரம் உள்ளது.

தற்போது நாங்கள் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறி வந்துள்ளோம். மூன்று நாள்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டோம். தற்போது இங்கு வந்து உதவிக கோருகிறோம். எனது  தந்தை அமைச்சராக இருப்பதால் தமிழக அரசோ அல்லது தமிழகத்தில் உள்ளவர்களோ இந்த விவகாரத்தில் எங்களுக்கு உதவ முன்வரமாட்டார்கள். இதன்காரணமாக கர்நாடகா வந்துள்ளோம்.

இங்குள்ள அரசிடம் எங்களுக்கு உதவ கோரிக்கை வைக்கிறோம். எங்களுக்கு கொலை மிரட்டல் வருவதால் கர்நாடக போலீஸார் எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

கடந்த முறை வீட்டை விட்டு வெளியேறிய போது சதீஷ் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்ய பார்த்தார்கள். அவர் மீது ஏதேனும் வழக்குப்பதிவு செய்தால் நான் தற்கொலை செய்துக்கொள்வேன் எனக் கூறியதால் அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.

இப்போது நாங்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டுள்ளோம். இனிமேல் இவருடைய குடும்பத்தில் யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top