பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்!

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்!

8 அணிகள் பங்கேற்கும் 12-வது பெண்கள் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி-மார்ச்சில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா அச்சம் காரணமாக இந்த போட்டி 2022-ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது. இதன்படி நியூசிலாந்தில் உள்ள 6 நகரங்களில் 2022-ம் ஆண்டு மார்ச் 4-ந் தேதி முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ள நிலையில் எஞ்சிய 3 அணிகள் எவை என்பதை நிர்ணயிப்பதற்கான தகுதி சுற்று இலங்கையில் அடுத்த ஆண்டு ஜூன் 26-ந் தேதி முதல் ஜூலை 10-ந் தேதி வரை நடக்கிறது. 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top