பிக் பாஸ் முகேன் நடிக்கும்' வேலன்'

பிக் பாஸ் முகேன் நடிக்கும்\' வேலன்\'

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மலேசியாவை சேர்ந்த முகேன் நடிப்பில் தயாராகும் தமிழ் திரைப்படத்திற்கு 'வேலன்' எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குனர் கவின் இயக்கத்தில் தயாராகிவரும் முதல் திரைப்படம் 'வேலன்'.  ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரித்து வரும் இந்தப்படத்தில் பிக் பாஸ் சீசன் 3யில் வெற்றி பெற்ற மலேசியாவை சேர்ந்த பாடகர், பாடலாசிரியர், நடிகர் முகேன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி நடிக்கிறார். இவர்களுடன் மூத்த நடிகர் பிரபு, சூரி, ரவி மரியா, தம்பி ராமையா, ஹரிஷ் பராடி, ஸ்ரீ ரஞ்சனி, சுஜாதா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, கோபி சுந்தர் இசை அமைக்கிறார்.
 
படத்தைப் பற்றி இயக்குனர் பேசுகையில்,' அழகான காதலை கொமடியுடன் கலந்து சொல்லி இருக்கிறோம். பொழுதுபோக்கு அம்சங்களுடன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பார்க்கும் வகையில் 'வேலன்' தயாராகி வருகிறார். முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.' என்றார்.
 
விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  மற்றும் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
பிக் பாஸ் சீசன் 3ல் வெற்றிபெற்ற முகேன், ஏராளமான ரசிகர்களை பெற்றிருப்பதால், அவர் நடிப்பில் தயாராகி வரும் 'வேலன்' பற்றிய அறிவிப்பு வெளியானவுடன் இணையத்தில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top