அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து!

அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து!

இங்கிலாந்து மற்றும் வேல்சில் சாம்பியன்ஸ் டிராபி ('மினி' உலக கோப்பை') கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் நேற்று இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

ஹேல்ஸ் அரைசதம்: இங்கிலாந்து அணிக்கு ஹேல்ஸ், ஜேசன் ராய் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. ராய், 13 ரன் எடுத்த நிலையில், மில்னே 'வேகத்தில்' போல்டானார். பின் ஹேல்ஸ், ஜோ ரூட் இணைந்து ரன் வேகத்தை அதிகரித்தனர். பவுல்ட் பந்தில் சிக்சர் அடித்த ஹேல்ஸ் (56) அரைசதம் அடித்து, மில்னேயிடம் வீழ்ந்தார்.

ஜோ ரூட் அபாரம்: மார்கன் (13) ஆண்டர்சனிடம் சிக்கினார். பொறுப்பான ஆட்டத்தை வெ ளிப்படுத்திய ஜோ ரூட், ஒருநாள் அரங்கில் 22வது அரைசதம் எட்டினார். இவர் 64 ரன்னுக்கு அவுட்டானார். வேகமாக ரன்கள் சேர்த்த ஸ்டோக்ஸ், 48 ரன் எடுத்தார்.

மொயீன் அலி, அடில் ரஷித் தலா 12 ரன்கள் எடுத்தனர். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய பட்லர், மில்னே மற்றும் பவுல்ட் பந்துகளை சிக்சருக்கு அனுப்பினார். பிளங்கட் (15) நீடிக்கவில்லை. சவுத்தீ வீசிய 50வது ஓவரில், உட் (0), ஜேக் பால் (0) அடுத்தடுத்த பந்துகளில் வீழ்ந்தனர்.

இங்கிலாந்து அணி 49.3 ஓவரில் 310 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அரைசதம் கடந்த பட்லர் (61), அவுட்டாகாமல் இருந்தார். நியூசிலாந்து சார்பில் ஆண்டர்சன் 3, மில்னே 3, சவுத்தீ 2 விக்கெட் வீழ்த்தினர். வில்லியம்சன் ஆறுதல்: கடின இலக்கைத் துரத்திய நியூசிலாந்து அணிக்கு ரான்கி (0), கப்டில் (27), ராஸ் டெய்லர் (39) ஷாக் கொடுத்தனர்.

வில்லியம்சன் 87 ரன்கள் எடுத்தார். பின் வரிசையில் நீஷம் (18), புரூம் (11) சான்ட்னர் (3) கைவிட்டனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்டர்சனும் (10) சொதப்ப, நியூசிலாந்து அணி 44.3 ஓவரில் 223 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 87 ரன்னில் வெற்றி பெற்ற இங்கிலாந்து, அரையிறுதிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருதை இங்கிலாந்தின் ஜேக் பால் (2விக்கெட்) தட்டிச் சென்றார்.

Tags: News, Sports, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top