ஐபில் போட்டிக்கான வீரர்கள் ஏலம்!
Posted on 06/02/2021
கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. 14-வது ஐ.பி.எல். சீசன் வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் தொடங்க உள்ளது. இதற்கிடையே, ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.
ஐபிஎல் ஏலத்திற்கு 1,097 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த வீரர்கள் ஆவார்கள். இதில் 814 இந்திய வீரர்களும் 283 வெளிநாட்டு வீரர்களும் பதிவுசெய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரர்கள் பதிவு காலக்கெடு நேற்றுடன் முடிவுற்றது.