ஐபிஎல் 15வது சீசனில் சிஎஸ்கே அணி ஆடும் முழு போட்டி விவரங்கள்!

ஐபிஎல் 15வது சீசனில் சிஎஸ்கே அணி ஆடும் முழு போட்டி விவரங்கள்!

ஐபிஎல் 15வது சீசனில் சிஎஸ்கே அணி எந்தெந்த தேதிகளில் எந்தெந்த அணிகளுக்கு எதிராக ஆடுகின்றன என்று பார்ப்போம்.

ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் களமிறங்குவதால் 10 அணிகள் இந்த சீசனில் களமிறங்குகின்றன. 
 
10 அணிகள் ஆடவுள்ளதால் இந்த சீசனில் 10 அணிகளும் தலா 5 அணிகள் அடங்கிய இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி க்ரூப் ஏ-வில் மும்பை இந்தியன்ஸ், கேகேஆர், டெல்லி கேபிடள்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய 5 அணிகளும், க்ரூப் பி-யில் சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 5 அணிகளும் இடம்பெற்றுள்ளன.
 
ஒரு பிரிவில் இருக்கும் ஒவ்வொரு அணியும் மற்ற 4 அணிகளுடன் தலா 2 முறையும், மற்றொரு பிரிவில் இருக்கும் 4 அணிகளுடன் ஒருமுறையும், ஒரேயொரு அணியுடன் மட்டும் 2 முறையும் மோதும் வகையில் போட்டி அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது.
 
ஐபிஎல் 15வது சீசனுக்கான முழு போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. வரும் 26ம் தேதி தொடங்கி 70 லீக் போட்டிகள் 65 நாட்களுக்கு நடக்கின்றன. வரும் 26ம் தேதி ஐபிஎல் 15வது சீசன் தொடங்கவுள்ள நிலையில் அன்றைய தினம் நடக்கும் முதல் போட்டியில் சிஎஸ்கேவும் கேகேஆரும் மோதுகின்றன.

சிஎஸ்கே அணியின் அனைத்து போட்டி விவரங்கள்:
 
மார்ச் 26: சிஎஸ்கே - கேகேஆர் 
மார்ச் 31: சிஎஸ்கே - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
ஏப்ரல் 3: சிஎஸ்கே - பஞ்சாப் கிங்ஸ்
ஏப்ரல் 9: சிஎஸ்கே - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
ஏப்ரல் 12: சிஎஸ்கே - ஆர்சிபி
ஏப்ரல் 17: சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ்
ஏப்ரல் 21: சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ்
ஏப்ரல் 25: சிஎஸ்கே - பஞ்சாப் கிங்ஸ்
மே 1: சிஎஸ்கே - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
மே 4: சிஎஸ்கே - ஆர்சிபி
மே 8: சிஎஸ்கே - டெல்லி கேபிடள்ஸ்
மே 12: சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ்
மே 15: சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ்
மே 20: சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ்

Tags: News, Sports

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top