இந்தியர்களிடம் இருந்து ரூ.1000 கோடியை சுருட்டிய கிரிப்டோகரன்சி மோசடி கும்பல்!

இந்தியர்களிடம் இருந்து ரூ.1000 கோடியை சுருட்டிய கிரிப்டோகரன்சி மோசடி கும்பல்!

உலகம் முழுவதும் டிஜிட்டல் நாணயமான கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வது அதிகரித்தவண்ணம் இருந்தது. குறிப்பாக கிரிப்டோகரன்சியானது இளைய தலைமுறையினரிடம் பெருமளவு பிரபலமாகி வருகிறது. குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களாக கிரிப்டோகரன்சி கடும் சரிவை சந்தித்தது. இதனால் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தவர்கள் பெரும் இழப்பை சந்தித்துவருகின்றனர். இது ஒருபுறமிருக்க போலியான நிறுவனங்கள் மூலம் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தவர்கள் தங்கள் பணத்தை இழந்துள்ளனர்.

இவ்வாறு போலி கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் காரணமாக இந்தியர்கள் ஆயிரம் கோடி ரூபாயை இழந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு நிறுவனமான கிளவுடுசெக் தெரிவித்துள்ளது. முறையான அனுமதி பெற்ற கிரிப்டோகரன்சி வர்த்தக தளங்களைப் போன்று போலியான இணையதளங்களை உருவாக்கி, சமூக வலைத்தளங்கள் மூலம் தகவலை பரப்புகின்றனர்.
 
குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தைகளை கூறுகின்றனர். இதனை நம்பி முதலீடு செய்த முதலீட்டாளர்கள் மொத்தமாக பணத்தை இழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலி கிரிப்டோ இணையதளங்கள் மூலம் மோசடி செய்பவர்கள், பயனர்களை அணுகி, அவர்களை வரவேற்கும் வகையில் அறிமுக சலுகையாக 100 டாலர் கிரெடிட் நோட்டை வழங்குகிறார்கள்.
 
இத்தகைய சலுகைகள் பயனர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக வரவு வைக்கப்படுகின்றன. இதைப் பார்த்ததும் அவர்களின் வலையில் விழுந்த பயனர்கள், தங்களிடம் உள்ள மொத்த பணத்தையும் அந்த இணையதளத்தில் செலுத்துகிறார்கள். அதிக முதலீடு கிடைத்தும், சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்களின் பணத்தை மோசடியாளர்கள் எடுத்துக்கொள்கிறார்கள், என கிளவுட்செக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
இதுதொடர்பாக கிளவுட்செக் தலைமை நிர்வாகி ராகுல் சசி கூறுகையில், பயனர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்த பிறகு, மோசடி இணையதளத்தின் அனைத்து வர்த்தகம் மற்றும் திரும்பப் பெறும் வசதிகளும் முடக்கப்பட்டுள்ளன, என்றார்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top