சிறந்த நடிகருக்கான விருதை வென்ற தனுஷ்

சிறந்த நடிகருக்கான விருதை வென்ற தனுஷ்

67வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் சிறந்த நடிகருக்கான விருது நடிகர் தனுசுக்கு கிடைத்திருக்கிறது.

67வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் சிறந்த தமிழ் படமாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'அசுரன்' படம் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. சிறந்த நடிகராக 'அசுரன்' படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுஷ் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். சிறந்த துணை நடிகருக்கான விருது இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதி தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். சிறந்த குழந்தை நட்சத்திரமாக இயக்குனர் மதுமிதா இயக்கத்தில் வெளியான 'கே. டி .எனும் கருப்பு துரை' படத்தில் நடித்த நாகா விஷால் எனும் சிறுவன் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
 
சிறந்த ஒலிக்கலவைக்கான விருதை பார்த்திபன் நடித்து இயக்கிய ஒத்த செருப்பு படத்தில் பணியாற்றியதற்காக ரசூல் பூக்குட்டி தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது 'விஸ்வாசம்' படத்திற்கு இசை அமைத்த D.இமான் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். பார்த்திபன் இயக்கி நடித்த 'ஒத்த செருப்பு'  படத்திற்கு நடுவர்களின் சிறப்பு ஜூரி விருது பிரிவில் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top