நீதிமன்ற வளாகத்தில் ப சிதம்பரத்தை விரட்டியடித்த காங்கிரஸ் வழக்கறிஞர்கள்...!

நீதிமன்ற வளாகத்தில் ப சிதம்பரத்தை விரட்டியடித்த காங்கிரஸ் வழக்கறிஞர்கள்...!

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வழக்கு ஒன்றில் ஆஜராக நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் அவரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னாள் மத்திய நிதி அமைச்சராகவும்,உள்துறை அமைச்சராகவும் காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவராக இருக்க கூடியவர் ப.சிதம்பரம், தலைமைக்கு மிக நெருக்கமானவர்களில் ஒருவராக இருந்து வருகிறார். மக்கள் பிரச்சனைகள் தொடர்பாக அவ்வப்போது தனது கருத்துகளை கூறிவருகிறார். காங்கிரஸ் ஆட்சியின் போது ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் அந்திய முதலீட்டை முறைகேடாக பெறுவதற்கு உதவியாக கூறி கடந்த 2019 ஆம் ஆண்டு சிபிஐ ப.சிதம்பரத்தை கைது செய்தது. நீண்ட நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு ஜாமினில் வெளியே வந்தார். அரசியலில் மட்டும் தான் மூத்தவராக இல்லாமல் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளிலும் ஆஜர் ஆகி வாதாடி வருகிறார். இப்படி பட்ட நிலையில் தான் கொல்கத்தா நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்பாக ஆஜராக ப.சிதம்பரம் சென்றுள்ளார். வழக்கு விசாரணையில் ஆஜராகி தனது வாதத்தை நீதிமன்றத்தில் எடுத்து வைத்தார்.
 
விசாரணை முடிவடைந்து வெளியே வந்த ப.சிதம்பரத்திற்கு கடும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. தனது காரை நோக்கி சென்று கொண்டிருந்த ப.சிதம்பரத்தை 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடம் பரபரப்பானது. நிலைமை கை மீறி சென்றதை உணர்ந்த சிதம்பரம் வேகமாக நடக்க ஆரம்பித்தார். இருந்த போதும் வழக்கிறர்கள் விடாமல் துரத்திக்கொண்டே சென்றனர். இருந்த போதும் கருப்பு அங்கியை காண்பித்து எதிர்ப்பு தெரிவித்தனர். ப.சிதம்பரத்திற்கு அருகில் இருந்த பாதுகாவலர் சிதம்பரத்தை பத்திரமாக அழைத்து சென்று காரில் ஏற்றினார். இதன் பிறகே அந்த இடத்தில் பரபரப்பு குறைந்தது. 
 
காங்கிரஸ் மூத்த தலைவராகவும், முக்கிய அமைச்சர் துறை பொறுப்பு வகித்த சிதம்பரத்தை எதற்காக வழக்கறிஞர்கள் துரத்தினார்கள் என விசாரித்ததில், மேலும் அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்தது, மேற்கு வங்கத்தில் அந்த மாநில பால்வளத்துறை தனியார் பால் நிறுவனத்துக்கு தனது பங்குகளை விற்றுள்ளது. இதனை  எதிர்த்து மேற்குவங்க காங்கிரஸ் கட்சி சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர்  அதீஷ் சவுத்ரி வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.  இந்த வழக்கில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அதே நேரத்தில் அந்த தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக ப.சிதம்பரம் ஆஜராகியுள்ளார். இதன் காரணமாகத்தான் இந்த வழக்கு விசாரணையின் போது ஆஜரான ப.சிதம்பரத்திற்கு எதிராக காங்கிரஸ் வழக்கறிஞர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top