சாதனை படைக்கும் விஜய் அண்டனியின் 'கோடியில் ஒருவன்' டீசர்

சாதனை படைக்கும் விஜய் அண்டனியின் \'கோடியில் ஒருவன்\' டீசர்

விஜய் அண்டனி நடிப்பில் தயாராகி வரும் 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர் வெளியாகி ஒரு மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்து வருகிறது.

'ஆள்', 'மெட்ரோ' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அனந்தகிருஷ்ணன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'கோடியில் ஒருவன்'. இந்தப்படத்தில் விஜய் அண்டனி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடிக்கிறார். இவர்களுடன் சண்டை பயிற்சி இயக்குனரான சூப்பர் சுப்பராயன் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். என் எஸ் உதயகுமார் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசை அமைக்கிறார்.
 
விஜய் அண்டனியின் நடிப்பில் தயாராகி வரும் 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர் அண்மையில் இணையத்தில் வெளியானது. எக்சன் ஜேனரில் தயாரான இந்த டீசர் ஒன்றரை மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்து வருகிறது.
 
'பிச்சைக்காரன்' படத்திற்கு பிறகு கொமர்ஷல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற நடிகராக வலம் வரும் விஜய் அண்டனியின் 'கோடியில் ஒருவன்' பட டீசருக்கு தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது. 
 
இதனிடையே நடிகர் விஜய் அண்டனி நடிப்பில் தயாராகி வரும் 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் , ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் ஒரே தருணத்தில் வெளியாகி சாதனை படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top