சென்னை டூ கோவளம் - ரூ.100 கோடியில் கடற்கரை சாலை மறுசீரமைப்பு!

சென்னை டூ கோவளம் - ரூ.100 கோடியில் கடற்கரை சாலை மறுசீரமைப்பு!

மெரினா முதல் கோவளம் வரையிலான 30 கி.மீ நிளமுள்ள சென்னை கடற்கரை பகுதி ரூ.100 கோடியில் மறுசீரமைக்கப்படும் என்று சட்டப்பேரைபில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வீட்டுவசதித்துறை மீதான மானிய கோரிக்கை நடைபெற்றது.  அப்போது அறிவிக்கப்பட்ட வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அறிவிப்புகள் :
 
1. சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளியில் (SAP)  இளநிலை திட்டமிடல் (B.Plan) என்று பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்கம் ரூபாய் 10 கோடி நிதி வழங்கும்.
 
2. திருமழிசை, மீஞ்சூர் திருவள்ளூர் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நகரங்களுக்கு புதுநகர் வளர்ச்சித் திட்டம் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தால் தயாரிக்கப்படும்.
 
3. மதுரையில் உள்ள தோப்பூர்  உச்சப்பட்டி துணை நகரத்திற்கு புதுநகர் ஊரமைப்பு இயக்கத்தால் தயாரிக்கப்படும்.
 
4. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் திருமழிசை திட்டப்பகுதியில் 16.92 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.1280 கோடி மதிப்பீட்டில் , பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் (PPP) குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகம் கட்டப்படும்.
 
5.நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கான வாங்கும் திறனுக்கேற்ற் குடியிருப்புகளுக்கு கட்டண சலுகை வழங்கப்படும்.
 
6.சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் மெரினா முதல் கோவளம் இடையேயான சுமார் 30 கிலோ மீட்டர் நீளமுள்ள சென்னை கடற்கரை ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு புத்தாக்கம் செய்யப்படும்.
 
7.சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் நீர் முனை மற்றும் ஏரிக்கரை மேம்பாடு ரூபாய் 100 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
 
8.சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய போக்குவரத்து வழிதடங்கள் ஒட்டி அமைந்துள்ள பகுதிகளுக்கு தள பரப்பு குறியீடு அதிகரிக்கப்படும்.
 
9.செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் புதிய பேருந்து முனையங்கள் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் கட்டப்படும்.
 
10. தமிழகத்தில் 10 லட்சம் பேரும் வசிக்கக்கூடிய நகரங்கள் அதிகரித்து வரும் நிலையில் நகரமயமாக்களை ஒழுங்குபடுத்தி திட்டமிட்ட நகரங்களை உறுதி செய்திட நகர வளர்ச்சி குழுமங்கள் திருச்சிராப்பள்ளி மற்றும் சேலம் ஆகிய பகுதிகளுக்கு ஏற்படுத்தப்படும். 
 
11. கோயம்புத்தூர்,திருப்பூர், ஓசூர் ஆகிய மாவட்டங்களில் AMRUT திட்டத்தின் கீழ் மறு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 17 நகரங்கள் உட்பட 20 நகரங்களுக்கான முழுமை திட்டங்கள் இந்நிதி ஆண்டு இறுதிக்குள் நகர் ஊரமைப்பு இயக்கத்தால் நிறைவேற்றப்படும்.
 
12. மக்கள் தொகை 50,000 முதல் 99,999 வரை உள்ள 71 நகரங்களுக்கு சீரான வளர்ச்சியை உறுதிசெய்ய புவியியல் தகவல் அமைப்பின் அடிப்படையில் முழுமை திட்டங்கள் மறுஆய்வு நகர் ஊரமைப்பு இயக்கத்தால் எடுத்துக் கொள்ளப்படும்.
 
13. பொதுமக்கள் கூட்டங்களுக்கான திட்ட அனுமதிகளை எளிதில் பெறும் வகையில் நகர் ஊரமைப்பு மாவட்ட அலுவலர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும்.
 
14. கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் நெரிசலை குறைக்கவும் அதன் சிறந்த பயன்பாட்டினை அறியவும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
 
15. இரண்டாம் முழுமைத் திட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி வரம்பிற்குள் முன்மொழியப்பட்டுள்ள 40 சாலை விரிவாக்கப் பணிகளில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் நிதி ஆண்டில் 10 சாலை விரிவாக்கப் பணிகள் ரூபாய் 200 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
 
16. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள 15 ஏக்கர் மற்றும் போரூரில் உள்ள 21 ஏக்கர் திறந்தவெளி ஒதுக்கீடு நிலங்களில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
 
17. சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் எல்லைக்குள் வலைப்பின்னல் சாலை அமைப்பு ரூபாய் 600 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
 
18. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் சுமார் ரூபாய் 53 கோடியில் வட்டி தள்ளுபடி திட்டம் செயல்படுத்தப்படும்.

 

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top