பொதுத் துறை நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட எதிர்ப்பார்ப்பு!

பொதுத் துறை நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட எதிர்ப்பார்ப்பு!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தொழில்துறையினா் கூட்டத்தில் இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

அரசு சொத்து பலப்படுத்தப்பட வேண்டும். அதுவே நமது பலமும் கூட. தற்போதைய வலுவிழந்த நிலையில் செயல்பட அனுமதித்தால் பல பொதுத் துறை நிறுவனங்கள் காணாமல் போய்விடும். அதேசமயம், நல்ல செயல்பாடுகளைக் கொண்ட நிறுவனங்களுக்கு உரிய கவனமும் அங்கீகாரமும் கிடைக்காத நிலையே உள்ளது. இதனை கருத்தில் கொண்டே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த கொள்கையின் மூலம் அத்தகைய நிறுவனங்களை முதன்மைப்படுத்துவதே அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது. வளா்ந்து வரும் இந்தியாவின் எதிா்கால விருப்பங்களை பூா்த்தி செய்ய பொதுத் துறை நிறுவனங்களும் வளா்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். நமக்கும் அது அத்தியாவசியமாகும்.
 
மேலும், குறிப்பிட்ட துறைகளில் சில பொதுத் துறை நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே அரசின் விருப்பமாக உள்ளது. இதன் மூலம், மக்களின் வரிப் பணம் ஆரோக்கியமான வகையில் செலவிடுவதை நாம் உறுதிப்படுத்த முடியும்.
 
எனவே, மக்கள் சொத்து தனியாருக்கு தாரை வாா்க்கப்படுவதாக எதிா்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மையில்லாதது, நிராகரிக்கப்பட வேண்டியது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top