கிருஷ்ண ஜெயந்தியும் சமுதாய சேவையும்..

கிருஷ்ண ஜெயந்தியும் சமுதாய சேவையும்..

பகவான் கிருஷ்ண அவதாரமோ அல்லது ராம அவதாரமோ அல்லது பல்வேறு அவதாரங்களை எடுப்பதற்கு ஒரே காரணம்: தன்னை மறந்து, இவ்வுலகில் புலனுடன் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் தம் பிள்ளைகளின் ஆத்மாவை மறுபடியும் தன்னிடம் சேர்த்துக்கொண்டு சந்தோஷமாக வைத்திருக்க வேண்டுமென்பதற்காக மட்டுமே. அந்த விருப்பத்தை பூர்த்தி செய்யவே கிருஷ்ணர் கீழே இப்பூவுலகிற்கு இறங்கி வருகிறார், அதை தான் அவதாரம் என்கிறோம். ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அல்லது ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி என அழைக்கப்படும் கிருஷ்ணரின் தோன்றிய நாள் இந்த வருடம் ஆகஸ்ட் 15ம் தேதி வரவுள்ளது. பொதுவாக, கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்.

கிருஷ்ணரின் தோன்றிய நாள். அந்த வார்த்தையே நமக்கு ஒரு குறிப்பான அம்சத்தை குறிக்கிறது. அவர் நம்மைப்போல் தாயின் கர்ப வாசத்திலிருந்து பிறக்கவில்லை. அவர் தன்னுடைய தாய் தந்தையை தேர்ந்தெடுத்து தானாக எந்த சமயத்தில் தோன்றவேண்டுமென்று நினைக்கிறாரோ அச்சமயத்தில் தோன்றுகிறார். எனவே, இது கிருஷ்ணரின் தோன்றிய நாள்.. பிறந்தநாள் அல்ல.. நாம் பிறக்கிறோம்.. கிருஷ்ணர் பிறப்பதல்ல.. நாம் இறக்கிறோம்.. கிருஷ்ணர் இறப்பதல்ல.. நாம் நம்முடைய இஷ்டமின்றி ஜட இயற்கையின் நிர்பந்தத்தினால் கர்ம வினையோடு பிறக்கிறோம். ஆனால், கிருஷ்ணர் அவ்வாறு கிடையாது. கிருஷ்ணர் தான் தன்னுடைய இஷ்டம் போல் இவ்வுலகில் தோன்றுகிறார். பிறப்பதில்லை. எனவே, கிருஷ்ண ஜெயந்தி என்பது ஒரு சாதாரண குழந்தை அல்லது ஒரு சாதாரண மனிதரின் பிறப்பை குறிப்பதல்ல.

எனவேதான், கிருஷ்ண ஜெயந்தி எனப்படுவது கிருஷ்ணருக்கு மட்டுமே உரித்தான ஒரு சொல். எனவே, கிருஷ்ணர் இங்கு தோன்றுவதை கிருஷ்ண அவதாரம் என்று கூறுகிறோம். பகவானின் அவதாரங்களில் கிருஷ்ண அவதாரம் மிகமிக முக்கியமானது. ஏனென்றால் கிருஷ்ண அவதாரத்தில் பகவான் என்பவர் எப்படி இருப்பார் என்பதை மக்களுக்கு உணர்த்தினார். அதேப்போல ராம அவதாரத்தில் ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டுமென்றும் அவர் இருந்து கட்டுகிறார். மனிதன் என்றால் ராமனைப்போலவும், பகவான் என்றால் கிருஷ்ணரைப் போல் இருக்க வேண்டும். இதனால் இந்த அவதாரத்திற்கு முன்பு அவர் இல்லை என்று என கூறுவது தவறான கருத்து. அவதாரம் என்றால் கீழ் இறங்கி வருவது.. புதிதாக தோன்றுவதல்ல.

இச்சமயத்தில் பலருக்கும் ஏன் கிருஷ்ணர் அவதாரமெடுத்து இப்பூவுலகிற்கு வரவேண்டுமென்கிற கேள்வி எழும்பும்.. அதற்கான பதில்: பகவான் வைகுண்டத்தில் எவ்வளவுதான் ஆனந்தமாக இருந்தாலும், அவருடைய எண்ணம் முழுவதும் இவ்வுலகில் கஷ்டப்படும் தன்னுடைய மற்ற குழந்தைகளான பல கோடி ஆத்மாக்களை எவ்வாறு உஞ்ஜீவனம் செய்து இவ்வுலகிலிருந்து மறுபடியும் மோட்சப்பாதைக்கு கொண்டுவருவது என்பதையே திருவுள்ளமாக கொண்டிருப்பதால் அவருக்கு எப்பொழுதும் நம் மீதுள்ள கருணையால் அங்கே ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்கமுடியாமல் கவலையில் இருந்தார். எனவே, கிருஷ்ணர் தாமாக முன்வந்து இவ்வுலகில் துன்பப்படும் அந்த ஆத்மாக்களை மீண்டும் மீட்டுச் செல்வதற்காக அவதாரமாக கீழே இறங்கி வருகிறார்.

மக்கள் சமூக சேவை என்கிற பெயரில் அன்னதானம் அளிப்பது, உடைகளை அளிப்பது போன்ற பல சேவைகளை செய்து வருகின்றனர். அச்சேவைகள் உபயோகமானது தான் ஆனால் அவை தற்காலிகமானது. ஒரு மனிதனுக்கு அது நிரந்தரமான ஆனந்தத்தை தராது. நிரந்தரமான ஆனந்தம் எதுவென்றால் குரு நம்மை கண்டுபிடித்து நம்மை மறுபடியும் அந்த பகவானுடன் சேர்த்து வைக்கிறார். அதுவே மிகப்பெரிய சமுதாய சேவை. எனவே, இந்த இஸ்கான் இயக்கம் செய்வது இந்த ஒரு சேவையே. தன்னை மறந்திருக்கும் ஆத்மாவை கிருஷ்ணருடன் இணைப்பது. எங்களின் ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் நாங்கள் மக்களுக்கு கூறுவது: கிருஷ்ணரை நம்புங்கள். கிருஷ்ணரின் பகவத்கீதையை படியுங்கள், கிருஷ்ணரின் நாமத்தைச் சொல்லுங்கள் கிருஷ்ணரிடம் சென்று சந்தோஷமாக இருங்கள் என்றுதான் கூறுகிறோம். இது இன்று வேலை செய்கிறது. மக்கள் யாரெல்லாம் இதை பயிற்சி செய்கிறார்களோ அவர்கள் இதயத்தில் மாற்றத்தை உண்டாக்கி பக்தியில் வளர்த்து அவர்களுக்கு உண்மையான மனத்தூய்மையளித்து எந்தவித ஏக்கமும் இல்லாமல் முழுத்திருப்தியைக் கொடுத்து இறுதியில் கிருஷ்ணரையும் கிருஷ்ணபக்தியையும் கொடுத்து அவர்களை ஆனந்தத்தில் ஆழத்துகிறது. எனவே, நாங்கள் மக்களிடம் கேட்டுக் கொள்வதெல்லாம், ‘ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே.. ’ஹரே கிரு ஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே..  என்கிற மந்திரத்தை குறைந்தது 108 முறையாவது உச்சரியுங்கள். 

கிருஷ்ண ஜெயந்தி அன்று வரும் பக்தர்களுக்கு பத்துவிதமான உணவு பதார்த்தங்களுடன் சிறப்பான விருந்து இஸ்கான், திருப்பாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்புக்கு: 9677914980

Tags: News, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top