சாரதியாக களமிறங்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

சாரதியாக களமிறங்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

இயக்குனர் கிங்ஸ்லின் இயக்கத்தில் தயாராகும் 'டிரைவர் ஜமுனா' என பெயரிடப்பட்டிருக்கும் படத்தில் வாடகை வாகனத்தை இயக்கும் சாரதியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

'காக்கா முட்டை' படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 'கோலிவுட்டின் கிளியோபாட்ரா' என்ற அடைமொழியுடன் போற்றப்படும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தற்பொழுது 'பூமிகா', 'திட்டம் இரண்டு', 'துருவ நட்சத்திரம்' என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இவர் நடித்து வருகிறார். 
 
'வத்திக்குச்சி' படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமான இயக்குனர் கிங்ஸ்லின் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. இந்த படத்தில் கால்டாக்சி டிரைவராக கதையின் நாயகி வேடத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார்.  படத்தில் பணியாற்றும் ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகையர் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
படத்தை பற்றி இயக்குனர் விவரிக்கையில்' இன்றைய சூழலில் நாளாந்த வாழ்க்கையில் வாடகை வாகனத்தை இயக்கும் சாரதிகளை அதிலும் குறிப்பாக பெண் சாரதிகளை கண்டு வருகிறோம். மத்திய தர வர்க்கத்தை சார்ந்த ஜமுனா என்ற பெண் சாரதியை பற்றிய கிரைம் திரில்லர் ஜானரில் இந்த திரைப்படம் உருவாகியிருக்கிறது.' என்றார்.
 
நேற்று ஐஸ்வர்யா ராஜேஷின் 31வது பிறந்த நாளன்று இப்படத்தின் அறிவிப்பு வெளியானதால் அவரது ரசிகர்கள் இணையத்தில் இதனை கொண்டாடி வருகிறார்கள்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top