மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் புதுவாழ்வு பெற்ற ஆறு வயது சிறுமி!

மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் புதுவாழ்வு பெற்ற ஆறு வயது சிறுமி!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுமி மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் புதுவாழ்வு பெற்றிருக்கிறார். தினசரி ஊதியத்தொழிலாளியின் மகளான, மோகனப்ரியா மரபியல் நோயான HLH அதாவது புற்றுநோயின் மிக அரிய மற்றும் கொடிய வகையான இதனால் ஒரு கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன். இதற்கான ஒரே தீர்வு உடன் பிறந்தவருடைய எலும்பு மஜ்ஜையைக்கொண்டு அறுவை சிகிச்சை செய்வது. இதற்காக காமில் குழந்தைகள் காப்பகம் குறிப்பிட்ட் அளவு நிதியை மீனாட்சி மிஷன் மருத்துவ்மனையின் மூலம் ஒதுக்கி வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மோகன ப்ரியாதற்போது அதன்முலம் பலன்பெற்ற சிறுமி புற்றுனோயில் இருந்து விடுதலை அடைந்திருக்கிறாள்.

ஆறு வயது சிறுமி மோகனப்ரியா ஹீமோபகோசிடிக் லிம்போஹிச்டியோசைடோசிஸ், இது நோயெதிர்ப்பு சக்தியின் கோளாறால் ஏற்படும் சிறுவயது மரபியல் நோயாகும். இதில் இருந்து மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மூலம் மீண்டு வந்திருக்கிறாள் இந்தச்சிறுமி.

மருத்துவக்குழுமம் இதைக்குணப்படுத்த பலவகையிலும் சிரமங்களை அனுபவித்து ரேணுகா, வேலுச்சாமி தம்பதியரின் முதல் குழந்தையான மோகனப்ரியாவின் உயிரை காக்க முயன்றனர். சிறுமிக்கான டோனருக்காக பொறுமையாகக் காத்திருந்தனர், அந்தக்காத்திருப்புக்கு இறுதியில் அவள் தங்கையின் மூலமே சிகிச்சை நடக்கவிருக்கிறது.

மோகனப்ரியா இந்த நோயில் உற்ற போது, அவருக்கு மூன்று வயது. அதீதக்காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றால் அவதிப்பட்டார். முழுமையாக குணமடைந்த மோகன ப்ரியாஇந்த நிலையில் அவருடைய பெற்றோர் அவரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பல்வேறு பரிசோதனைகளுக்குப் பின்னே கோடியில் ஒருத்தருக்கு வரும் இந்த நோய் மோகனப்ரியாவைத் தாக்கியிருப்பது தெரிய வந்தது.

இது குறித்து மீனாட்சி மிஷனின் எலும்பு மஜ்ஜை மாற்றுப்பிரிவின் மூத்த மருத்துவரான திரு.காசி விஷ்வனாத்ன் கூறியதாவது: மோகனப்பிரியவின் சிகிச்சையானது, அவருடைய உடலின் செல்கள் அவரைக் கைவிட்ட பின்பு அவருடைய உடன்பிறந்த தங்கையின் உடலிலிருந்து ஆரோக்கியமான புதிய எலும்பு மஜ்ஜை செல்களை இவருடைய உடம்பிற்கு வெற்றிகரமாக மாற்றினால் அவர் பிழைக்கலாம். அப்படி டோனர் யாரும் கிடைக்காததால் இடைவெளியில் தற்காலிகமாக அவரைக்காப்பற்ற கீமோதெரபி சிகிச்சை கையாளப்பட்டு வந்தது. அந்த நேரத்தில் தாம் அவருடைய இளைய தங்கை சர்மிகா பிறந்தார். அவரது எலும்பு மஜ்ஜை செல்களின் மூலமாக தற்போது மீனாட்சி மிஷன் மருத்துவமனையில், மோகனப்பிரியாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் புது வாழ்வு பெற்றிருக்கிறார்.

Tags: News, Hero, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top