மாஸ்டர் பட நடிகரை இயக்கும் வசந்தபாலன

மாஸ்டர் பட நடிகரை இயக்கும் வசந்தபாலன

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் தயாராக இருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் கதையின் நாயகனாக நடிக்க நடிகர் அர்ஜுன் தாஸ் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

'ஆல்பம்', 'வெயில்', 'அங்காடித் தெரு', 'அரவான்', 'காவியத்தலைவன்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் வசந்தபாலன் தன்னுடைய பாடசாலை தோழர்களுடன் இணைந்து Urban Boyz Studios  என்ற பெயரில் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். நிறுவனம் சார்பில் தயாரிக்கும் முதல் படத்தில் 'கைதி', 'அந்தகாரம்', 'மாஸ்டர்' ஆகிய படங்களில் நடித்து தன் கணீரென்ற குரலும், கம்பீரமான நடிப்பாலும் ரசிகர்களை வசப்படுத்திய நடிகர் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஏனைய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதனிடையே இயக்குனர் வசந்தபாலன் 2019 ஆம் ஆண்டில் ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ' த லிப்ட் பாய்' என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்யவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது என்பதும், அவர் தற்போது  ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஜெயில்' படத்தின் இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top