அபாகஸ் தெரிந்தவரா நீங்கள் - திறமையை நிரூபிக்க அறிய வாய்ப்பு!

அபாகஸ் தெரிந்தவரா நீங்கள் - திறமையை நிரூபிக்க அறிய வாய்ப்பு!

UCMAS - அபாகஸ் கணிதத்திறன் பயிற்சி - உலகப் புகழ் பெற்ற இந்த நிறுவனம் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் தன்னுடைய பயிற்சி மையங்களை நிறுவி 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கணிதத்திறனை வளர்த்துள்ளது.

பொதுவாக குழந்தைகள் கணித பாடம் என்றால் “கசப்பாக” உணர்வார்கள். ஆனால் இந்த அபாகஸ் மூலம் கணிதப் பயிற்சி அளிக்கப்படும் பொழுது கணிதம் எளிமையான பாடமாக கணித பயமின்றி ஆர்வமாக கற்கிறார்கள். பொதுவாக அபாகஸ் எனும் கருவிமூலம் கணிதம் கற்கும்பொழுது குழந்தை களின் வலது மற்றும் இடது மூளையின் செல்கள் தூண்டி விடப்பட்டு நுண்ணறிவு வளர்ச்சியடைகிறது. அத்துடன் கவனம், நினைவாற்றல், கற்பனா சக்தி தூண்டப்படுகிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

தொடர்ச்சியாக மாணவர்களுக்கு 8 நிலைகளில் இந்த அபாகஸ் கணிதப்பயிற்சி அளிக்கப்பட்டு ஒவ்வொரு நிலையிலும் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் ஆகிய 4 அடிப்படைக் கணக்குகளில் தேர்ச்சி பெறுவதோடு துல்லியமாகக் கணக்கிடுதல், கூர்ந்து கவனித்தல், மனதில் பதிய வைத்தல் திறமையை மேம்படுத்துதல், விரைவாக செயலாற்றுதல் ஆகிய திறன்களையும் வளர்த்துக்கொள்கிறார்கள்.

சராசரியாக 10 நிமிடங்களில் 80 முதல் 100 கணக்குகளை (2 இலக்கம் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்) பயிற்சிக்குப் பின்னர் மாணவர்களால் செய்ய முடியும்.

இந்த பயிற்சியினால், பள்ளியில் சொல்லிக்கொடுக்கப்படும் அடிப்படை கணக்குகளை மற்ற மாணவர்களைவிட இந்த அபாகஸ் பயிற்சி பெற்ற மாணவர்கள் விரைவாகவும் துல்லியமாகவும் செய்து முடிப்பர். மேலும் மற்ற பாடங்களிலும் கவனக்குவியல், புகைப்பட ஞாபக சக்தி, மனப்பாடம் மனதில் பதிய வைத்தல் ஆகியவை மேம்படும், மொத்தத்தில் அபாகஸ் கணித பயிற்சி மாணவர்களின் மூளை சம்பந்தமான செயல்பாடுகளை வளர்த்துக்கொள்ள உதவும் ஓர் அற்புத பயிற்சி UCMAS கணிதப் பயிற்சி காலம் - 2-1/2 வருடம், நிலைகள் - 8 (3-1/2 மாதம் 1 நிலை) வாரம் - 2 மணி நேரம் வகுப்புகள்.

பெற்றோர்களே - மதுரை குழந்தைகளுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம். சென்னை UCMAS அபாகஸ் நிறுவுனம் மற்றும் மதுரை UCMAS அபாகஸ் மையங்கள் இணைந்து நடத்தும், மாபெரும் அபாகஸ் கணிதத்திற்ன் (UCMAS குழந்தைகள் மட்டும்) ஓவியம் மற்றும் அழகான கையெழுத்துப் போட்டி,

இடம் : பூங்கா முருகன் கோவில் திருமண மண்டபம், காந்தி மியூசியம் அருகில், நாள் : மே 1 திங்கட் கிழமை, நேரம் : காலை 9 மணி அபாகஸ் போட்டி, மாலை : 2 மணி ஓவியம் போட்டி, 3 மணி கையெழுத்து போட்டி, ஓவியப் போட்டிக்கு வரைபடத்தாளைத் தவிர மற்ற பொருள்களை தாங்களே கொண்டு வரவும். முன்பதிவு அவசியம். மே 1 திங்கள் 2 மணி வரை மண்டபத்தில் முன்பதிவு செய்யலாம்.

Tags: News, Madurai News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top