தமிழில் அறிமுகமாகும் நட்சத்திர வாரிசு

தமிழில் அறிமுகமாகும் நட்சத்திர வாரிசு

இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தின் மூலம் டாக்டர் ராஜசேகர்- ஜீவிதா ஆகிய நட்சத்திர தம்பதிகளின் இளைய வாரிசான சிவாத்மிகா ராஜசேகர் நடிகையாக அறிமுகமாகிறார்.

'ஒரு கல்லூரியின் கதை', 'மாத்தி யோசி', 'ஜிகினா' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் தயாராகும் புதிய பெயரிடப்படாத படத்தில் கௌதம் கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் இயக்குனரும், நடிகருமான சேரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் சரவணன், டேனியல் பாலாஜி, ஜாக்குலின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப்படத்தில் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக பிரபல நட்சத்திர தம்பதிகளான டாக்டர் ராஜசேகர் மற்றும் ஜீவிதாவின் இளைய வாரிசு சிவாத்மிகா  நடிக்கிறார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக நடிகை சிவாத்மிகா அறிமுகமாகிறார். இந்தப் படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார்.
 
படத்தைப் பற்றி இயக்குனர் பேசுகையில்,' ஏதோ சில காரணங்களால் பிரிந்திருக்கும் ஒரு குடும்பத்தை மீண்டும் அக் குடும்பத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் ஒன்று சேர்க்க பாடுபடுகிறான். அவரது முயற்சி வெற்றி பெறுகிறதா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை. இதில் உள்ளூர் கேபிள் டிவி ஒன்றின் தொகுப்பாளினியாக நடிகை சிவாத்மிகா நடிக்கிறார். திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மார்ச் முதல் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.' என்றார்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top