ஆத்மார்த்தமான அன்பை வெளிப்படுத்தும் சல்சா நடனம்!

ஆத்மார்த்தமான அன்பை வெளிப்படுத்தும் சல்சா நடனம்!

‘நடனம் என்றாலே ஏதோ கையை காலை அசைத்து ஆடுவது என்றும், சினிமாவில் நடிகர்கள் ஆடுவதுதான் நடனம் என்கிற குறுகிய வட்டத்திற்குள்ளாக அடைந்து விட்டோம். ஆனால் நடனம் என்பது அது அல்ல. நம்முடைய உடல், உள்ளம் இரண்டும் ஒரே சீராக செயல்பட்டு ஆத்மார்த்தமாக புரிதலே நடனம்.’ என தொடங்குகிறார் லத்தீன் டான்ஸ் அகாடமியின் நடன பயிற்சியாளர் திரு. கோபிநாத் அவர்கள்.

ஜூம்பா, ஏரோபிக்ஸ், சல்சா, கன்டெம்ப்ரரி நடனம் என்பது மக்களிடையில் இன்று நல்லதொரு வரவேற்பினை பெற்றுள்ளது. இத்தகைய மேற்கத்திய நடன வகையில் தற்போது பிரபலமாகி வருகிறது சல்சா நடனம். லத்தீன் நாட்டின் கலாச்சார நடனமாக கருத்தப்படும் சல்சா, கரிபியன் தீவு, லத்தீன் அமெரிக்கா, நியூயாக் நகரில் உள்ள லத்தீன் சமூகத்தினரின் கியுபன் நடனங்களான சன், சன் மோன்டியோ, ச்சா ச்சா ச்சா, மம்போ போன்ற நடனங்களின் பரிணாம வளர்ச்சியாக சல்சா என்னும் பெயரோடு 1970-களில் வளம்வரத் தொடங்கியது.

இந்த சல்சா நடனம் என்பது இந்தியாவிற்கே இன்றும் புதியதாகவே கருத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த நடனத்தைப் பற்றியும், இதன் வரவேற்பினைப் பற்றியும் அறிந்துகொள்ள திரு.கோபி அவர்களை சந்தித்து உரையாடினோம்.

‘சல்சா ஆத்மார்த்தமான அன்பை வெளிப்படுத்தும் ஒரு நடனம் என ஒரு வரியில் சொல்லிவிடலாம். லத்தீன் மற்றும் ஸ்பானிஷில் நாடுகளில் காதலை வெளிப்படுத்தும் ஒரு நடனமாக சல்சா இன்றும் கருதப்படுகிறது. சல்சா புரிவதற்கு நடன ஜோடிகளின் மத்தியில் நல்லதொரு புரிதலும், இருவர் மீதும் அதிகப்படியான நம்பிக்கையும் முக்கியமானதாக திகழ்கிறது. இதனால்தான் உலக நடன அரங்கில் சல்சாவிற்கு சிவப்பு கம்பலம் விரிக்கப்படுகிறது. ஆனால், நம்முடைய இந்தியாவைப் பொருத்தவரையில் நம்முடைய கலாசாரம் என்பது முற்றிலும் மாறுபட்ட ஒன்று.

இன்று பெரும்பாலும் திருமணமான ஜோடிகள் உடல்நலத்திற்காக ஜும்பா, ஏரோப்பிக்ஸ் பிட்னஸ், நடனங்களின் பக்கம் வலம்வருகிறார்கள். அவர்களுக்கு சல்சா என்பது முற்றிலும் ஒரு புதிய அனுபவமாக அமையும். ஒரு மணிநேர சல்சா நடனம் சுமார் 420 கலோரிவரை குறைக்கிறது. மேலும், இன்று பெரும்பாலான குடும்பங்களில் கணவன் மனைவி இருவருமே பணிக்கு செல்பவர்களாக இருப்பதினால் தங்களுக்காக நேரத்தை சரியாக செலவிட முடியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு சல்சா ஒரு நல்ல மருந்தாவே இருக்கும். தற்போது திருமணமான இளம் ஜோடிகள் சல்சா வகுப்புகளில் சேரத் தொடங்கியுள்ளனர். இதனால் பொங்கல் முதலாக சல்சா வகுப்புகளை சர்வேஸ்வரர் கோவிலின் அருகில் உள்ள எங்களின் நடனப்பள்ளியில் துவங்கியுள்ளோம்’ என கூறினார்.

தொடர்புக்கு: 9790297193, 9944144085

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top