மதுரை போடி அகல ரயில் பாதையை மின்மயமாக்க ரூ. 98.53 கோடி ஒதுக்கீடு!

மதுரை போடி அகல ரயில் பாதையை மின்மயமாக்க ரூ. 98.53 கோடி ஒதுக்கீடு!

மதுரை-போடி இடையை 90. 4 கி. மீ. , தூரம் மீட்டா் கேஜ் ரயில் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றும் பணி கடந்த 2011-ல் தொடங்கியது. இதில், மதுரை-தேனி இடையே புதிய அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்து, சோதனை ஓட்டம் நடந்துள்ளது. தேனி-போடி இடையே அகல ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் புதிய ரயில் பாதைகள் மற்றும் ரயில் பாதை மின்மயமாக்கலுக்கு மத்திய அரசு மொத்தம் ரூ. 3, 865 கோடி நிதி ஒதுகீடு செய்துள்ளது. இதில், மதுரை-போடி அகல ரயில் பாதையை மின்மயமாக்குவதற்கு ரூ. 98. 53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், இந்தப் பணிகள் வரும் 2023-ம் ஆண்டில் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்றும் மதுரை ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top