தமிழ்நாடுகழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 பேர் பலி - மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!
Posted on 22/04/2022

விஷவாயு தாக்கி மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 3 பேர் பலியான விவகாரத்தில் மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
மதுரையில் நேற்று இரவு தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சரவணன், சிவக்குமார், லட்சுமண் ஆகிய 3 பேரும் எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தனர். இதனையடுத்து மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 3 பேர் விஷ வாயு தாக்கிய பரிதாபமாக பலியாகினர்.
இந்த விவகாரத்தில் தனியார் ஒப்பந்தகார நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் ஆனந்த் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் ஒப்பந்த பணியாளர்களை பணி செய்ய வேண்டிய நிலைக்கு உள்ளாக்கியது, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் பணி செய்ய வைத்ததால் இறப்புக்கு காரணம் என மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் இந்த 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags: News