பி.ஆர்.பி. உட்பட 3 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

பி.ஆர்.பி. உட்பட 3 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

மேலூர் அருகே கீழையூர் சேக்கி ஏந்தல் குளத்தில் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததை தொடர்ந்து மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

இந்த நிலையில் அரசு தரப்பில் வக்கீல் ஷீலா, மாவட்ட குற்றப்பிரிவு ஆவண போலீஸ் துணை சூப்பிரண்டு சூரிய மூர்த்தி, குற்றபிரிவு வழக்கு போலீஸ் அதிகாரிகள் ராஜாசிங், பிரகாஷ் ஆகியோர் மேலூர் கோர்ட்டில் நீதிபதி செல்வ குமார் முன்னிலையில் கிரானைட் முறைகேடு சம்பந்தமாக 3 வழக்குகளில் 4 குற்ற பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இதில் ஒன்று பி.ஆர். பி.க்கு எதிரான வழக்கில் அரசுக்கு ரூ. 31 கோடியே 81 லட்சம் வரை வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக 2,418 பக்க குற்ற பத்திரிக்கையும். இதேபோல பூலாம்பட்டியில் இயங்கி வந்த பி.ஆர்.பி. நிறுவனத்தில் ரூ. 1 கோடியே 40 லட்சத்து 17 ஆயிரம் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக 242 பக்க குற்றப்பத்திரிகையும். மேலூரை சேர்ந்த இப்ராகிம் சேட் திருவாதவூரில் உள்ள புறம்போக்கு பாறையில் கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டதில் ரூ. 21 கோடியே 13 லட்சத்து 43 ஆயிரம் வரை அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக 233 பக்க குற்றப்பத்திரிக்கையும், அதே பகுதியில் கிரானைட் வெட்டி எடுத்த தனபால் என்பவர் ரூ. 21 கோடியே 42 ஆயிரம் வரை வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது 287 பக்க குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

பி.ஆர்.பி. மற்றும் இப்ராகிம் சேட், தனபால் ஆகியோர் மீது மொத்தம் ரூ. 84 கோடியே 14 லட்சம் வரை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக 3 ஆயிரத்து 180 பக்க குற்றப்பத்திரிக்கை இன்று கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

Tags: News, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top