ஒரு முறை சார்ஜ் ஒரு வாரம் நீடிக்கும் 21,000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்!

ஒரு முறை சார்ஜ் ஒரு வாரம் நீடிக்கும் 21,000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்!

மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது ஸ்மார்ட்போன். அந்த ஸ்மார்ட்போனில் சார்ஜ் இல்லையென்றால் பித்து பிடித்தார்போல் சுற்றுபவர்கள் ஏராளம். அந்த அளவுக்கு அதில் தீவிரமாக உள்ளனர். குறிப்பாக இளம் தலைமுறையினர் ஸ்மார்ட்போன் இல்லையென்றால் அவ்வளவுதான் என சொல்லும் அளவுக்கு அதன் மீது அதீத மோகம் கொண்டுள்ளனர்.

ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறையாவது சார்ஜ் செய்யும் நிலைமை தான் பெரும்பாலும் உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒருவாரம் வரை தாங்கும் பேட்டரி பேக் அப் உடன் ஒரு ஸ்மார்ட்போன் கிடைத்தால் அது அதிர்ஷ்டம் தானே.
 
இந்த ஸ்மார்ட்போன் 33W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. அதுமட்டுமின்றி 6.78-இன்ச் FHD+ டிஸ்ப்ளே மற்றும் 90Hz அப்டேட் வீதத்துடன் டெம்பர்ட் கிளாஸ் பாதுகாப்புடன் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமென்சிட்டி G95 SoC புராசசர் உள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் அம்சமும் இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.21,071 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது AliExpress தளத்தின் வாயிலாக வருகிற ஜூன் 27-ந் தேதி முதல் உலக சந்தையில் விரைவில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
ஆம், அப்படி ஒரு ஸ்மார்ட்போன் தான் விரைவில் அறிமுகமாக உள்ளது. Oukitel WP19 என்கிற பெயர் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 21,000 mAh பேட்டரி பேக் அப் உடன் வருகிறது. இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒரு வாரம் வரை பயன்படுத்திக் கொள்ளலாமாம். தொடர்ந்து பயன்படுத்தினால் 4 நாட்கள் வரை பேட்டரி தாங்கும் என கூறப்படுகிறது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top