இரண்டு பக்கமும் இடிவாங்கும் சந்தானம்!

இரண்டு பக்கமும் இடிவாங்கும் சந்தானம்!

விவேகம் படத்தின் ரிலீஸ் தேதியை மனதில் கொண்டு ஒதுங்கி நின்ற படங்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக தங்களுடைய வெளியீட்டு தேதியை அறிவித்து வருகின்றன.

சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள 'சர்வர் சுந்தரம்' படத்தின் ரிலீஸ் தேதியும் சில வாரகளுக்கு முன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதாவது, செப்டம்பர் 7-ஆம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் செய்யவிருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். ஆனால் அந்த தேதியில் சர்வர் சுந்தரம் படம் வெளியாகவில்லை.

காரணம். இப்படத்தை தயாரித்துள்ள கெனன்யா பிலிம்ஸ் தயாரித்த படங்களை வெளியிட்டு நஷ்டப்பட்டவர்கள் பிரச்சனை செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் இந்தப் படத்தை வெளியிடும் கே.ஆர்.பிலிம்ஸ் மிகப்பெரிய பண நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதன் காரணமாக சர்வர் சுந்தரம் தற்போது ரிலீஸாக வாய்ப்பே இல்லை என்ற நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது.

இதனால் அப்செட்டான சந்தானம், சக்கப்போடு போடு ராஜா படத்தை திரைக்குக் கொண்டு வர ஆர்வம் காட்டினார். அந்தப் படத்தின் தயாரிப்பாளரான விடிவி கணேஷ், ஏற்கனவே தயாரித்த "இங்க என்ன சொல்லுது" படம் தொடர்பாக சில பஞ்சாயத்துகள் முளைத்துள்ளனவாம். இதன் காரணமாக "சக்கப்போடு போடு ராஜா" படவெளியீட்டிலும் சிக்கல் உருவாகியுள்ளது.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top