சிலம்பரசனின் 'பத்து தல' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சிலம்பரசனின் \'பத்து தல\' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தயாராகிவரும் 'பத்து தல' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

சிறிய இடைவெளிக்குப் பிறகு, தன் உடல் எடையை குறைத்து சிலம்பரசன் நடிப்பில் தயாரான 'ஈஸ்வரன்' திரைப்படம் பொங்கலன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று, நஷ்டத்தை தவிர்க்கும் வகையில் வசூல் செய்து வருகிறது. இதைத்தொடர்ந்து சிலம்பரசன் நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'பத்து தல'. இந்த படத்தில் சிலம்பரசனுடன் மற்றொரு இளம் நடிகரான கௌதம் கார்த்திக், நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர் கலையரசன், 'அசுரன்' பட புகழ் நடிகர் டிஜே, எழுத்தாளரும், கவிஞருமான மனுஷ்யபுத்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்கான 'பத்து தல' படத்தின் வசனங்களை 'ஆட்ட நாயகன்' படத்தின் இயக்குனரான ஆர் எஸ் ராமகிருஷ்ணன் எழுத, 'சில்லுன்னு ஒரு காதல்' படத்தை இயக்கிய இயக்குனர் கிருஷ்ணா இயக்குகிறார். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
 
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை  ஏ ஆர் ரகுமான் வெளியிட்டார். தனி நாற்காலியில் கம்பீரமாக சிலம்பரசன் அமர்ந்திருக்கும் தோரணையும், அவர் எதிரில் மற்ற நடிகர் நடிகைகள் பவ்யமாக நிற்கும் தோற்றமும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருவதால் இணையத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரவேற்பு கிடைத்து வருகிறது.

 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top