முதல் கோப்பை வென்ற வெரோனிகா!

முதல் கோப்பை வென்ற வெரோனிகா!

அமெரிக்காவின் பெண்களுக்கான ‘டபிள்யு.டி.ஏ.,’ சார்லெஸ்டன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் ரஷ்யாவின் வெரோனிகா குடெர்மெடோவா, மான்டெனெக்ரோவின் டன்கா கோவினிக்கை சந்தித்தார். முதல் செட்டை வெரோனிகா 6–4 என கைப்பற்றினார்.

தொடர்ந்து அசத்திய இவர் அடுத்த செட்டை 6–2 என எளிதாக வசப்படுத்தினார். ஒரு மணி நேரம் 37 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் வெரோனிகா 6–4, 6–2 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பை வென்றார். டபிள்யு.டி.ஏ., தொடரில் வெரோனிகா 23, வென்ற முதல் கோப்பை இது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top