வில்லனாக நடிக்கும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்

வில்லனாக நடிக்கும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்

நடிகராகவும், இயக்குனராகவும் வலம்வரும் கௌதம் வாசுதேவ் மேனன் 'ருத்ர தாண்டவம்' என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

காதல் காட்சிகளை பிரத்தியேக பாணியில் படமாக்கி ரசிகர்களிடத்தில் காதல் உணர்வை பரவச் செய்யும் படைப்பாளிகளில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கியமானவர். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் சில படங்களில் நடித்தும் வருகிறார். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான 'குட்டி ஸ்டோரி' என்ற ஆந்தாலஜி பாணியிலான படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது. 
 
'திரௌபதி: என்ற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் தயாராகி வரும் 'ருத்ர தாண்டவம்' என்ற படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தில் 'தல' அஜித்தின் உறவினரும், நடிகருமான ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'குக் வித் கோமாளி' புகழ் நடிகை தர்ஷா குப்தா நடிக்கிறார். ஃபரூக் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ஜுபின் இசை அமைக்கிறார்.
 
'ருத்ர தாண்டவம்' படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top