விஜய் ஹசாரே டிராபியில் நடராஜன்!

விஜய் ஹசாரே டிராபியில் நடராஜன்!

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் உள்ளூர் ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே டிராபி நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் 20 பேர் கொண்ட தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள், 'டுவென்டி–20’, டெஸ்டில் அறிமுகமான இவர், இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்யப்படவில்லை. எனவே இவருக்கு பி.சி.சி.ஐ., அனுமதி வழங்கும் பட்சத்தில், தமிழக அணிக்காக விளையாடலாம்.

இதுகுறித்து தமிழக அணி தேர்வுக்குழு தலைவர் வாசுதேவன் கூறுகையில், "விஜய் ஹசாரே டிராபியில் விளையாட நடராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பி.சி.சி.ஐ., அனுமதி வழங்கினால் 'லெவன்’ அணியில் இடம் பெறுவார். விக்னேஷ் மீண்டும் அணியில் இணைந்தது சிறப்பு. விஜய் சங்கருக்கு காயம் முழுமையாக குணமடையவில்லை,’’ என்றார்.

 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top