360 அடி உயரத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய மூவர்ண கொடி

360 அடி உயரத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய மூவர்ண கொடி

360 அடி உயரத்தில் நாட்டின் மிகப்பெரிய மூவர்ண கொடி அமிர்தசரஸில் ஏற்றப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள அட்டாரி சர்வதேச எல்லைப்பகுதியில் இந்தியாவின் மிக உயரமான மூவர்ண கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. இந்த தேசியக்கொடியை மத்திய அமைச்சர் அனில் ஜோஷி, நேற்று  முதல் முறையாக பறக்கவிட்டார். இந்த மூவர்ண கொடி 110 அடி உயரமும், 24 மீட்டர் அகலமும் மற்றும் 55 டன் எடையும் கொண்டதாகும். இந்த கொடி, பஞ்சாப் அரசாங்கத்தின் அமிர்தசரஸ் மேம்பாடு அறக்கட்டளை ஆணையத்தின் திட்டத்தால் ரூ.3.50 கோடி செலவில் அமைக்கப்பட்டது. பஞ்சாப்பில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று இந்த மூவர்ண கொடியை அமைச்சர் ஏற்றி வைத்தார்.

எல்லைப்பகுதியில் இந்த கொடி நிறுவப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும் வகையில் உள்ளது என்று அனில் ஜோஷி கூறியுள்ளார். இந்தக் கொடி பறப்பதை பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து பார்க்க முடியும். ஏற்கெனவே ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இந்தியாவிலேயே அதிகபட்ச உயரமாக சுமார் 300 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. மற்றும் அமிர்தசரஸ் நகரில் உள்ளூரில் உள்ள ரஞ்சித் அவின்யூ பொது பூங்காவில் ஏற்கனவே 170 அடி உயரத்தில் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்த மூவர்ண கொடியை கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி நிறுவ திட்டமிட்டிருந்தனர். ஆனால் சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாக நிறுவப்பட்டது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top