'ராக்கி'யை வெளியிடும் நயன்தாரா

\'ராக்கி\'யை வெளியிடும் நயன்தாரா

'தரமணி' படப் புகழ் நடிகர் வசந்த் ரவி நடிப்பில் தயாராகி இருக்கும் 'ராக்கி' படத்தை நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைந்து தொடங்கியிருக்கும் பட நிறுவனம் மூலம் வெளியிடுகிறார்கள்.

அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'ராக்கி'. 'தரமணி' படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் வசந்த் ரவி,  கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் 'இயக்குனர் இமயம்' பாரதிராஜா நடித்திருக்கிறார். சிரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, தர்புகா சிவா இசை அமைத்திருக்கிறார்.
 
கேங்ஸ்டர்களை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்தை கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு, இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இணைந்து தொடங்கியிருக்கும் ரவுடி பிக்சர்ஸ் மூலம் வெளியிடுகிறார்கள். இதன் காரணமாக இப்படத்திற்கு திரை உலகில் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top